சங்கரராமன்-உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு
சென்னை- பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வழக்கறிஞர்கள்ஆஜராவதற்குத் தடை விதிக்கக் கோரி ஜெயேந்திரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு புதுவை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்தது. அபபோது ஜெயேந்திரர், விஜேயந்திரர் உள்ளிட்ட 22 பேர் நேரில்ஆஜரானார்கள்.அப்போது ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரலு கூறுகையில், தமிழகஅரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
எனவே இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதற்கும், குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 24 பேரையும் நாளையே நீதிமன்றத்தில் ஆஜராககூறி வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சின்னப்பாண்டி வழக்கை வரும் 28ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அப்பு, கதிரவன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே குற்றப் பத்திரிக்கை நகல்களை தங்களது தாய் மொழியில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று கோரி அப்பு மற்றும் கதிரவன் ஆகியோர் தாக்கல்செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 24பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதில் அப்பு , தனது தாய் மொழியான தெலுங்கிலும், கதிரவன் தனது தாய்மொழியானதமிழிலும் குற்றப்பத்திரிக்கை நகல்களை மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்றுகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயபால் இன்று தீர்ப்பளித்தார்.
தனது தீர்ப்பில், இருவரது வழக்கறிஞர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் உள்ளமொழி (ஆங்கிலம்) தெரியும் என்பதால் இந்தக் கோரிக்கை தேவையற்றது என்று கூறிஇருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications