வேணாம்..-கருணாநிதிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
மதுரை:
என் வாயைப் பிடுங்குவது போல பேச வேண்டாம். அது நல்லதல்ல என்று திமுகதலைவர் கருணாநிதிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், அலங்காநல்லூர்,பாலமேடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் வேனில் இருந்தபடியே பேசினார்.அங்கு கூடியிருந்த மக்களிடையே விஜயகாந்த பேசுகையில்,
பாலமேடு நான் சிறு வயதில் எனது அப்பாவோடு சுற்றிய ஊர். இங்கு வந்து வடை, டீஎல்லாம் சாப்பிட்டுள்ளேன். அப்போ நான் விஜய ராஜாவாக இருந்தேன். இப்போதுவிஜயகாந்த்தாக வந்துள்ளேன். அதற்காக ஆண்டவனுக்கு நன்றி.
நான் பேசுவதை சிலர் குறை கூறுகிறார்கள். எனது சினிமா வசன உச்சரிப்பைகிண்டலடிக்கிறார்கள். ஏன் சினிமாவில் வேறு நடிகர்களே இல்லையா? அவர்கள்வசனம் பேசுவது மட்டும் சரியாக இருக்கிறதா? (ஆனா.. உங்க அளவுக்கு யாராவதுபேச முடியுமா?)
நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். அதிமுகவும் கிடையாது, திமுகவும்வேண்டாம், பாஜகவும் இல்லை. தனித்துத்தான் போட்டியிடுவோம்.
மதுரையில் பேசியபோது கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் கூட்டணிக்கு ரெடிஎன்றேன். உடனே ஆண்டி, போண்டி என்று கருணாநிதி கிண்டலடித்து எழுதுகிறார்.
என் வாயைப் பிடுங்காதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல. திமுகவில் எத்தனை பேர்ஆண்டியானார்கள் என்பது எனக்குத் தெரியும். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்மட்டுமே மந்திரிகளாக வர வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
கருணாநிதியையும் கடற்கரைக்கு அழைத்து தங்க பேனா கொடுத்தது நான்தான்.
இந்தியா முழுவதும் 1 ரூபாய்க்கு போன் என்ற திட்டத்தால் தமிழக மக்களுக்கு என்னலாபம்? நமக்கு உறவினர்கள் டெல்லி போன்ற வட மாநிலங்களிலா இருக்கிறார்கள்?.தமிழகம் முழுவதும் பேச 25 பைசா என்று திட்டத்தை கொண்டு வாருங்கள். அப்படிவந்தால் வரவேற்பார்கள்.
அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள். அவர்களுக்குத் தேவை கோடிகள்தான், ஓட்டைவாங்கிக் கொண்டு ஐந்து வருடம் உங்களைப் பார்க்கவே வர மாட்டார்கள் என்றார்விஜயகாந்த்.
அதிமுக கூட்டணி இல்லை என்று சொன்னாலும் அந்தக் கட்சியை தப்பித் தவறி கூடவிஜய்காந்த் விமர்சிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது ஏனோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications