சத்யபாமா பல்கலை.யில் பெரும் வன்முறை: காவலர் அறைக்கு மாணவர்கள் தீவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்ஜிஆர் காலத்து விஐபி ஜேப்பியாருக்குச் சொந்தமான சென்னை சத்யபாமாநகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்பில்ஈடுபட்டனர்.

அவர்களை பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மிருகத்தனமாக தாக்கியதால்கோபமடைந்த மாணவர்கள், காவலர் அறையை தீ வைத்து கொளுத்தினர்.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பயந்து மாணவர்கள் முகமூடி அணிந்து கொண்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பொறியியல் படிப்புகளுக்கானஅங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இதனால்இந்தப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளைப் படித்து வரும்மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னை சத்யபாமா, எஸ்.ஆர்.எம்., காஞ்சி மடத்தின் சங்கரா உள்ளிட்ட பலநிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இது தொடர்பாக போராட்டம் நடத்திவந்தனர்.

இதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் வன்முறையில்இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைக்கழக மாணவர்களும் சமீபத்தில் வன்முறயில் குதித்தனர்.

இந் நிலையில் கடந்த ஒரு வாரமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வகுப்புகள்நடந்து வந்தன. இச் சூழ்நிலையில் இன்று காலை சத்யபாமா பல்கலைக்கழகமாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்தனர். சாலை மறியலில்ஈடுபட்டனர்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த மாணவர்களை, பல்கலைக்கழகபாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக அடித்து விரட்டினர்.

இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் கோபத்துடன் பாதுகாவலர் அறையைமுற்றுகையிட்டு அவர்கள் அறைக்கு தீ வைத்தனர். இதில் அந்த அறை முற்றிலும்எரிந்து சாம்பலானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பயந்து மாணவர்கள் முகமூடி அணிந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது போராட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில்,

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெறுவதற்கான எந்தமுயற்சியையும் நிர்வாகம் எடுக்கவில்லை. இது குறித்துக் கேட்டால், ரவுடிகளைவைத்து மாணவர்களை அடித்து உதைக்கிறார்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் என்ற பெயரில் ரவுடிகளும், சமூகவிரோதிகளும்தான் பணியாற்றுகிறார்கள்.

அவர்களுக்கு இது பொறியியல் கல்லூரி, இங்கு படிப்பவர்கள் வருங்காலத்தில்பொறியாளர்களாகப் போகிறவர்கள் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லை. மிகவும்ஆபாசமாக பேசியவண்ணம், ஆடு, மாடுகளைப் போட்டு அடிப்பது போல எங்களைஅடிக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளை பாதுகாவலர்கள் என்ற பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம்வைத்துக் கொண்டு மாணவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது. அங்கீகாரம்கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

எத்தகைய அடக்குமுறையையும் சந்திக்க நாங்கள் தயார் என்று ஆவேசமாக கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+