23ம் தேதி முதல் பாஜக வேட்பாளர் நேர்காணல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாஜக சார்பில் போட்டியிட விண்ணப்பம் அளித்துள்ளவர்களிடம் வருகிற 23ம் தேதிமுதல் 25ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக சட்டசபைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து கடந்த 10ம் தேதிமுதல் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்பம் கொடுத்துள்ளவர்களிடம் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரைநேர்காணல் நடைபெறுகிறது. இதில் கோட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர்,செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொள்வர். மாவட்ட வாரியாக நேர்காணல்நடைபெறும்.
கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேர்காணல் நடைபெறுகிறது என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications