For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவை ஆதரிக்க போட்டி போடும் கட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரும் குட்டி குட்டி அமைப்புகளின்எண்ணிக்கை 200ஐத் தாண்டி விட்டது. இதில் சில அமைப்புகள் வெறும் லெட்டர்பேடில் மட்டுமே வாழும் அமைப்புகளாகும்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்ஆகிய பெரிய கட்சிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக்,மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சந்தானத்தின் பார்வர்ட் பிளாக், திண்டிவனம்ராமமூர்த்தியின் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ், விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுகஉள்ளிட்ட சில குட்டிக் கட்சிகளும், ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கமும் உள்ளது.

இந்தக் கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா குறைந்தது ஒரு தொகுதி முதல்அதிகபட்சமாக மதிமுகவுக்கு 35 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளார். இவை போக,ஏகப்பட்ட குட்டி குட்டி அமைப்புகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த அமைப்புகளுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கருணாநிதிபாணியில் அனைவருக்கும் தனது மனதில் இடம் தருவார் அம்மா என்று தெரிகிறது.

தினசரி குறைந்தது 10 அமைப்புகளின் நிர்வாகிகள் அதிமுக தலைமைக் கழகத்திற்குவந்து அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறி விட்டு, சீட் கேட்டு கோரிக்கையையும்வைத்து விட்டுச் செல்கின்றனர். சிலர் உங்களுக்காகப் பிரச்சாரம் செய்றோம்.. என்றுசொல்லிவிட்டு தலையை சொறிகின்றனர்.

இவர்களை கவனித்து அனுப்புவதற்காகவே ஒரு நிர்வாகி கம்பல்சரியாக இருக்கவேண்டிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு அதிமுக தலைமைக் கழக அலுவலகம்படு பிசியாக, ஜன சந்தடியாக காணப்படுகிறது.

அதிமுகவுக்கு ஆதரவு தரும் அமைப்புகளின் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விட்டதாகஅதிமுகவினர் கூறுகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடுமாம்.

அம்பேத்கர் புரட்சிப் புலிகள், இந்திய தேசதியவாத கிறிஸ்துவ கட்சி, முஸ்லீம் மக்கள்கட்சி, முற்போக்கு முஸ்லீம் லீக், தமிழ்நாடு ரெட்டியார் நல சங்கம், தெரசா பொதுநலச் சேவை சங்கம், மக்கள் மாநிலக் கட்சி, அகில பாரத குடியரசுக் கட்சி, அகிலஇந்திய தெலுங்கு சம்மேளனம் என இதுவரை யாருமே கேள்விப்படாத பலகட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அக்கட்சிக்கு நச்சயம் கூடுதல்பலம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விவசாய சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு:

இந் நிலையில் 5 விவசாய சங்கங்கள் வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்குஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.

தமிழக விவசாயிகள் சங்கம், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம், காலிங்கராயன்பாசன விவசாயிகள் சங்கம், கொங்குநாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள்சங்கம் (பாலசுப்ரமணியம் பிரிவு) ஆகிய 5 விவசாய அமைப்புகள் திமுகவுக்குஆதரவு தெரிவித்துள்ள விவசாய சங்கங்களாகும்.

இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் திமுகவின்தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு நீண்ட கோரிக்கைப் பட்டியலையும் அவர்கள்கருணாநிதியிடம் கொடுத்தனர்.

4 தொகுதிகளில் சுசி போட்டி:

இந்திய சோஷலிச ஒற்றுமை மையம் (எஸ்.யு.சி.ஐ-சுசி) நான்கு தொகுதிகளில்போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும் அது அறிவித்துள்ளது.

எழும்பூரில் வி.சிவக்குமார், பூங்கா நகரில் என்.பி. துரை, தேனியில் வால்டேர்,குறிஞ்சிப்பாடியில் சந்திரா வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்தஅமைப்பு மேற்கு வங்கத்தில் 125 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

நல்ல செய்தியை எதிர்பார்க்கும் அ.ம.க:

இதற்கிடையே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அருந்ததி மக்கள் கட்சி, 3தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளது.

அதிமுகவிடம் சீட் கேட்டு அதன் தலைமைக் கழக அலுவலகத்தில் ஏகப்பட்டகட்சிகள் காத்துக் கிடக்கின்றன. அவர்கள் இருக்கும் பக்கம் தப்பித் தவறிக் கூட போய்விடாமல் அதிமுக நிர்வாகிகள் தலைமறைவாக பதுங்கிப் பதுங்கிப் போய் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந் நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள அருந்ததி மக்கள்கட்சி 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளது. இந்தக்கட்சியின் தலைவர் வலசை ரவிச்சந்திரன் கூறுகையில், 1996ம் ஆண்டிலிருந்துஎங்களது சமுதாயம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

1996ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தலில்நிபந்தனையற்றஆதரவை நாங்கள் கொடுத்தோம். இந்த முறை 3 தொகுதிகளைஎதிர்பார்க்கிறோம். வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை மற்றும் தர்மபுரியில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது.கிட்டத்தட்ட 17 தொகுதிகளில் எங்களது வாக்கு வங்கி வலுவாக உள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கொள்கை பரப்புச்செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளோம். விரைவில் நல்லசெய்தி வரும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X