தமிழகத்தில் வளைக்கப்பட்டு வரும் ரெளடிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், ரவுடிகளை கணக்கெடுக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தலையொட்டி தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், ரவுடிகளைகணக்கெடுத்து அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்ஆணையம், மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.இதன்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகளைபட்டியல் போட்டு போலீஸார் பிடித்து வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 550 ரவுடிகள், குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.இவர்களைப் போலீஸார் வளைத்துப் பிடித்து கைது செய்து உள்ளே தள்ளிவருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சிறு குற்றவாளிகள் முதல் மிகப் பெரிய தாதாக்கள் வரைஅனைவரையும் பிடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறைதரப்பில் கூறப்படுகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications