கருணாநிதி வன்னியர்களின் எதிரி-ஏ.கே.நடராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வன்னியர்களின் நண்பனைப் போல தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாநிதிதான்,வன்னிய சமூகத்தின் உண்மையான எதிரி என்று வன்னியர் சங்கம் மற்றும் வன்னியர்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே.நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு எதிராக வன்னியர்களைத் திரட்ட நடிகர்ரஜினியால் பயன்படுத்தப்பட்டவர் நடராஜன். இப்போது இவரும் தீரனும் போய்ரஜினி தரப்பை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவளிக்குமாறு கோரியும் பலன்கிடைக்கவில்லை. ரஜினி இவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை.

இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் நடராஜன், அதிமுககூட்டணியில் சீட் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திண்டிவனத்தை அடுத்த கோனேரி குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவை தனதுகுடும்ப விழாவாகத்தான் ராமதாஸ் நடத்தினார். இந்த விழா குறித்து தனது குடும்பநாளேட்டில் கூட, வன்னியர் சங்கப் பெரும் விழா என்று அவர் குறிப்பிடவில்லை.அதற்கு மனம் இல்லாமல், வெறுமனே முப்பெரும் விழா என்றுதான் எழுதியிருந்தார்.

வன்னியர் என்ற பெயரையே அவர் இருட்டடிப்பு செய்துள்ளார். இதைப் பார்த்துவன்னியர்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள். விழாவில் பேசிய கருணாநிதி,ராமதாஸை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆனால் முன்பு ஒருமுறை ராமதாஸ் பேசுகையில், 27 வன்னியர்களின் உயிர்ப் பலிக்குகாரணம் கருணாநிதிதான். வன்னியர்களை அழிப்பதற்காகவே கருணாநிதி அவதாரம்எடுத்துள்ளார் என்று கூறியவர்.

கருணாநிதியும், அவரது பேரன் தயாநிதி மாறனும் யார் யாருக்கோ தபால் தலைவெளியிடுகிறார்கள்.

ஆனால் வன்னிய சமூகத்தின் முன்னோடிகளுக்கு ஒரு தபால் தலையாவதுவெளியிட்டார்களா?

வன்னிய விரோத செயல்களில் ஈடுபடும் கருணாநிதியைக் கண்டிக்காமல், தமிழகமுதல்வரைப் பார்த்து எதிரி என்று கூறுகிறார் ராமதாஸ். சிரிப்பாக வருகிறது.

உண்மையில் வன்னிய சமூகத்திற்கு பல நன்மைகளையும், சலுகைகளையும் செய்தவர்முதல்வர் ஜெயலலிதாதான். வன்னிய சமூகத்தின் உண்மையான எதிரிகருணாநிதிதான். துரோகி யார், விரோதி யார் என்பது வன்னியர்களுக்குத் தெரியும்என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+