ஒரு வாரத்தில் வேட்பாளர் பட்டியல்- விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் பட்டியல்இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என அக்கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

திமுக, அதிமுகவுக்கு இணையாக வேட்பாளர் தேர்வில் படு விறுவிறுப்பாகஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் சென்னையிலும்,மதுரையிலுமாக வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி வருகிறார்.

தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள விஜயகாந்த் அங்கு மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கோவை, ஈரோடு,நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

நேர்காணலுக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக அளவில்வந்திருந்தனர். வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்படும் என விஜயகாந்த் அறிவித்திருப்பதால் பெண்களை அதிக அளவில்காண முடிந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விடும் என்றும் அதன் பிறகுபட்டியல் வெளியிடப்படும் எனவும் விஜயகாந்த் கட்சி வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன. யாரும் சரியில்லை: விஜயகாந்த்

இந் நிலையில் இன்று வேலூரில் தனது 3 நாள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்விஜய்காந்த்.

வேலூர் மாவட்ட எல்லையான ஓச்சேரியில் திரளாக கூடியிருந்த தொண்டர்கள்மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும்மக்களுக்காக பாடுபடவில்லை. ஒரு கட்சி தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்து விடநினைக்கிறது. இன்னொரு கட்சியோ, நண்பர்களை மட்டுமே வளர்த்து வருகிறது. இந்தஇரு கட்சிகளும் பண பலம் படைத்தவை.

நான் பண பலம் இல்லாதவன், தான, தர்மம் செய்து பணத்தை செலவழித்து விட்டேன்.மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை. மக்களின்பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழி அரசியலில் ஈடுபடுவதுதான் என்பதால்தான்அரசியலுக்கு வந்தேன்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட யாருமே மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை. யாரும் சரியில்லை. வேலூரிலிருந்து அரக்கோணம் வரை செல்லும்சாலையைப் பார்த்தாலே இது தெரியும். சாலையா அது?. வேலூர் மாவட்டத்தில்குடிநீர்ப் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. இதையெல்லாம் கூட தீர்க்காமல்இவர்கள் என்னதான் ஆட்சி நடத்துகிறார்கள்?

என்னிடம் ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள். இதுபோன்ற அடிப்படைபிரச்சினைகளே இல்லாமல் செய்து காட்டுகிறேன். நான் அதிமுகவுடன் கூட்டணிவைப்பேன் என்று திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள் (??).

அந்தப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தலுக்குப் பிறகுகூட்டணி என்று கூறினேன் என்றார் விஜயகாந்த்.

இரு நாட்களுக்கு முன்பு தான் நான் அதிமுக கூட்டணியில் சேரப் போவதாகஉளவுத்துறையும் அதிமுகவும் புரளியைக் கிளப்புவதாகக் கூறினார் விஜய்காந்த்.இப்போது இதிலும் கூட அதிமுகவை விட்டு திமுகவை மட்டுமே தாக்குவதைப்பார்த்தால், அதிமுக கூட்டணிக்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிவருவதாகவே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+