குளத்தை மூடி ஷாப்பிங் காம்பளக்ஸ்-அரசுக்கு தடை
டெல்லி:
சென்னை அருகே குளத்தை மூடி விட்டு அங்கு வணிக வளாகம் கட்டும் தமிழகஅரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை அடையாறு மத்ய கைலாஷ் கோவிலிலருந்து சிறுசேரி தகவல்தொழில்நுட்பப் பூங்கா வரை தகவல் தொழில்நுட்ப சாலையை அமைக்கும் பணியைதமிழக அரசு தொடங்கியுள்ளது.சாலை அமைக்கும் பணியுடன் சேர்த்து ஆங்காங்கே வணிக வளாகம் உள்ளிட்ட பிறகட்டமைப்பு கட்டுமானப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில் ஒக்கியம் துரைப்பாக்கம் என்ற இடத்தில் நல்ல நீர் வளத்துடன் உள்ளகுளத்தை மூடி விட்டு அங்கு பல அடுக்கு வணிக வளாகம் அமைக்க தமிழக அரசுநட்டமிட்டுள்ளது.
இதை எதிர்த்து துரைப்பாக்கம் ஊராட்சி உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் தற்போதுஎப்படி உள்ளதோ அது அப்படியே நீடிக்க வேண்டும். அங்கு எந்தவித கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கூறுகையில், குளம்அப்படியே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சாலைஅமைக்கும் திட்டம் பாதிக்கப்படும் என்றார்.
ஆனால் அந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்து நிராகரித்து விட்டனர்.மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் 2 வாரங்களில் பதில் அளிக்குமாறுகூறி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications