திமுக நேர்காணல்: இன்றே கடைசி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு மனு செய்துள்ளவர்களிடம் நடத்தப்பட்டுவரும் நேர்காணல் இன்றுடன் முடிகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 129 தொகுதிகளும்அறிவிக்கப்பட்டு விட்டன. இந் நிலையில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம்செய்துள்ளவர்களிடம் நடத்தப்பட்டு வரும் நேர்காணல் இன்றுடன் முடிகிறது.

கடந்த 10ம் தேதி இந்த நேர்காணல் தொடங்கியது. 14ம் தேதி வரை நேர்காணல்நடந்து வந்தது. இதையடுத்து 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நேர்காணல்நிறுத்தப்பட்டது.

திமுகவுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் 21ம்தேதி நேர்காணல் தொடங்கி நடந்து வருகிறது. இன்றுடன் இது முடிகிறது.

இன்று திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. மாலையில்புதுவைக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:

இதற்கிடையே எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

சன்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற வாசகத்திற்கு உதாரணமாகவிளங்குகிறார் சோனியா காந்தி. இரட்டைப் பதவிகள் இருப்போருக்காக அவசரச்சட்டம் கொண்டு வருவது தேவையென்றால் அது பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். சோனியா காந்தியின் ராஜினாமா மடிவு, மனித உள்ளங்களில் தாக்கத்தைஏற்படுத்தும்.

சோனியா காந்தியின் விலகலால் மத்திய கூட்டணி அரசுக்கு பாதிப்பை எதையும்ஏற்படுத்தாது. அவசரச் சட்டம் கொண்டு வரப் போவதாக செய்தி வந்துள்ளது. அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியாது.

இப்போது தான் நான் சோனியாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவரதுசெயலை பாராட்டினேன். டெல்லியில் உள்ள தலைவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்என நம்புகிறேன்.

எனது தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கும். தேர்தல் அறிக்கையைவெளியிட்டு விட்டுத்தான் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+