மீசையில மண் இல்லையே: திண்டிவனம்
சென்னை:
அதிமுகவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. உறவு மிகச் சுமூகமாகவேஇருக்கிறது என்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.
அதற்காகவே காத்திருந்தது போல, தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற புதியகட்சியைத் தொடங்கினார்.
தனது கட்சிக்கு ஜெயலலிதா சீட்களை அள்ளித் தந்து கெளரவப்படுத்துவார்திண்டிவனம் நம்பியிருந்தார்.
முதலில் 46ல் ஆரம்பித்து கடைசியில் எப்படியும் ஒன்று, ரெண்டு சீட்டாவது கிடைத்துவிடும் என திண்டிவனமும், கூட இருந்தவர்களும் காத்திருந்தனர்.
ஆனால் அத்தனை பேரின் நினைப்பிலும் மண்ணைப் போடும் வகையில், ஒரு சீட்கூட கொடுக்காமல் நட்டாற்றில் விட்டு விட்டார் ஜெயலலிதா.
இதனால் அதிர்ந்து போயுள்ள திண்டிவனம், தனது ஆதரவாளர்களுடன் சென்னையில்ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்திற்குப் பின்னர் திண்டிவனம் கூறுகையில்,
அதிமுகவுக்கும், எங்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை, கருத்துவேறுபாடு இல்லை. உறவு சுமூகமாகத்தான் இருக்கிறது.
இப்போது கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியன் எங்களது கட்சியில்இணைவதாக விருப்பம் தெரிவித்துள்ளது குறித்துத்தான் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தோம் என்றார்.
திண்டிவனம் இப்படிக் கூறினாலும், ஒரு வேளை, ஒரு சீட் கூட தராமல் ஜெயலலிதாஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்பது குறித்து திண்டிவனம் ஆலோசனைநடத்தியதாகவே தெரிகிறது.
குப்புறக் கவுந்தாலும் மீசையில் மண் இல்லையே என்ற வகையில் தான் அவரது பேச்சுஉள்ளது.












Click it and Unblock the Notifications