இருட்டறையில் உள்ளதடா அண்ணா பல்கலை!
சென்னை:
இந்தியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாபல்கலைக்கழகம் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருண்டுகிடக்கிறது!.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இந்த பல்கலைக்கழகத்தின்கீழ்தான் வருகின்றன.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இங்கு படித்து வருகிறார்கள். விடுதிகளிலும்நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர்.
இந் நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்சாரம்துண்டிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வரும் மின்சார கேபிளில் ஏற்பட்ட துண்டிப்புகாரணமாக மின் வினியோகம் தடைபட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகவளாகம் முழுவதும் இருளில் மூழ்கியது.இதனால் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக விடுதிகளில்தங்கியிருந்த மாணவ, மாணவியர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.செமஸ்டர் நேரம் என்பதால் பரிட்சைக்குப் படிக்க முடியாமல் மாணவ, மாணவியர்அவதிப்பட்டனர். மின்சார வினியோகத்தை சரி செய்யும் பணியில் உடனடியாகஅதிகாரிகள் இறங்கினர்.
ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதனால்அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து இருண்டு கிடக்கிறது.












Click it and Unblock the Notifications