தாயார், 2 தங்கைளை எரித்துக் கொன்ற மகள்தலைமறைவு- போலீஸ் குடியிருப்பில் பயங்கரம்
கெரூர்:
கரூர் அருகே தனது தாயார் மற்றும் 2 தங்கைகளை கொடூரமாக கொலை செய்து விட்டுகல்லூரி மாணவி தப்பி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கரூர், காந்தி கிராமம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வம்.இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகபணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மேரி. இவர்களுக்கு நவீனா, வினோதினி, சமேலி, அகிலா என்றஅகிலாண்டேஸ்வரி ஆகிய மகள்கள்.
இவர்களில் நவீனா, கரூர் அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டில் படித்துவருகிறார். மற்றவர்கள் பள்ளிப் படிப்பில் உள்ளனர்.
செல்வம் நேற்று இரவுப் பணி என்பதால் காவல் நிலையம் சென்று விட்டார். வீட்டில்மேரியும், நான்கு மகள்களும் மட்டும் இருந்தனர்.
நவீனா ஒருவரைக் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவருக்கும்,தாயாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தங்கைகளும் தாயாருக்கு ஆதரவாகபேசியதால் நவீனா ஆத்திரம் அடைந்துள்ளார்.
இயல்பிலேயே அதிக கோப குணம் கொண்டவரான நவீனா, கோபத்துடன் தூங்கச்சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை வினோதினி பலத்த ரத்தக்காயத்துடன் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு ஓடி வந்தார்.ட
அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம், தனது அக்கா நவீனா, தாயார்மற்றும் 2 தங்கைளைக் கொன்று விட்டதாக அழுதபடி கூறி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸார் விரைந்து சென்று வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது மேரி உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். வீட்டுக்கு வெளியேஇருந்த குடிநீர் தொட்டிக்குள் சமேலி, அகிலா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.
3 பேரது உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைமறைவாகி விட்ட நவீனாவைப் பிடிக்க போலீஸார் தனிப்படைஅமைத்துள்ளனர்.
அதிகாலையில் எழுந்த நவீனா, தூங்கிக் கொண்டிருந்த தனது தாயார் மற்றும்சகோதரிகளைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். தாயார் மீது மண்ணெண்ணை ஊற்றிதீ வைத்துள்ளார்.
பின்னர் அம்மிக் கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.அப்படியும் ஆத்திரம் தீராத அவர் விநோதினியை கத்தியால் குத்திக்காயப்படுத்தியுள்ளார்.
அவர் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளார். வெறி தணியாத நவீனா, அகிலாமற்றும் சமேலியை தரதரவென இழுத்துச் சென்று தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கடித்துகொலை செய்துள்ளார்.
அதன் பின்னரே அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர் சம்பவம் நடந்த வீட்டைப்பார்வையிட்டு தனிப்படைகள் அமைத்து, நவீனாவைத் தேடு பணியை முடுக்கிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications