For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. நடத்தியது சங் பரிவார் ஆட்சி: தமுமுக

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திமுக தலைமையிலான கூட்டணிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆதரிப்பதாகதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

கோவையில் நடந்த இக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தமிழக முஸ்லீம்களுக்கு கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக அரசு தவறி விட்டது.

ஆனால் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தீவிரமாக பாடுபடப் போவதாக திமுகதலைவர் கருணாநிதியும், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உறுதியளித்துப்பேசி வருகிறார்கள்.

எனவே சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கமுடிவு செய்துள்ளோம். திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காகதீவிரப் பிரசாரம் மேற்கொள்வோம் என்றார்.

ஜெவும் மோடியும்:

முன்னதாக சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜவஹிருல்லாஹ் பேசுகையில்,

சங் பரிவாரின் ஆலோசனையின்பேரில் தான் ஜெயலலிதா ஆட்சி செய்து வந்தார்.இந்தியாவில் ராமர் கோவில் கட்ட முடியாது என்றால் வேறு எங்கு கட்ட முடியும்என்றார்.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டபோது, இந்தியாவில்முஸ்லீம்கள் மட்டும் தான் சிறுபான்மையினரா, இதனால் பெரும்பான்மையோரின்சலுகைகள் பறிபோகும் என்றார்.

ஜெயலலிதாவின் ஆட்சி இப்போது மரணப் படுக்கையில் கிடக்கிறது. அவரால்யாருக்கும் இப்போது உதவ முடியும்?

கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டியவர்கள் எல்லாம் (12 முஸ்லீம் அமைப்புகள்) கடந்த3ம் தேதி ஜெயலலிதாவைப் போய் பார்த்தார்கள். திரும்பி வந்து, முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான ஆணையத்தை ஜெயலலிதா அமைத்துவிட்டார் என்றார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின்னர் ஆணையம் அமைத்தார்களாம்.நானும் அதற்கான அரசாணையை தேடிக் கொண்டே இருக்கிறேன். இதுவரைகிடைக்கவில்லை.

எது எதற்காகவே இந்தச் சமுதாயத்தை அடகு வைத்து காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்.

குஜராத் கலவரத்தை மறக்க முடியுமா?. ஆயிரக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களும்கர்ப்பிணிப் பெண்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்களே அப்போதுவாய் திறந்தாரா இந்த ஜெயலலிதா?

நரேந்திர மோடி பதவியேற்றபோது தனி விமானத்தில் பறந்து போய் அவருக்குபூச்செண்டு கொடுத்து மகிழ்ந்த ஜெயலலிதாவை முஸ்லீம்களால் மன்னிக்கத்தான்முடியுமா? என்று கேட்டார் ஜவாஹிருல்லாஹ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X