தமிழக நதிகளை இணைப்போம்: அதிமுக தேர்தல் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல்அறிக்கையை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்றுவெளியிட்டார்.

இன்று காலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த ஜெயலலிதாதமிழகத்திற்கான அறிக்கையை வெளியிட அவைத் தலைவரும் மாஜி சபாவுமானகாளிமுத்து பெற்றுக் கொண்டார்.

புதுவைக்கான அறிக்கையை அம் மாநில அதிமுக செயலாளர் அன்பழகனும், கேரளமாநிலத்திற்கான அறிக்கையை அந்த மாநில அதிமுக செயலாளர் ராஜ பாண்டியனும்பெற்றுக் கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் கடந்த 1991 முதல் 96 வரை நடந்த அதிமுக ஆட்சி மற்றும்2001 முதல் நடந்து வரும் அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகள்பட்டியலிடப்பட்டுள்ளன.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

- தமிழகத்தை நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக்கும் முயற்சிகள் தொடர்ந்துசெயல்படுத்தப்படும்.

- தகவல் தொடர்புத் துறையில் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்லாது, உலகின்கவனத்தையும் ஈர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

- 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில்வேலை வாயப்புகள் உருவாக்கப்படும்.

- தமிழை உண்மையான உயர் தனிச் செம்மொழிகள் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழ் உள்ளிட்ட 19 தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும்.

- இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசும் மாநிலங்களுடன் தொடர்பு கொள்ளதொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்க வேண்டும்.

- தமிழ் மொழியின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டுஅமல்படுத்தப்படும்.

- விவசாயிகளின் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதில்முன்னுரிமை வழங்கப்படும்.

- கூட்டுப் பண்ணைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

- அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதிகளை நாட்டுடமையாக்க வேண்டும்.

- தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்க திட்டம் தீட்டப்படும்.

- கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

- கால்நடைகளுக்குத் தேவையான பசும்புல் தீவனம் குறைந்த விலையில் கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும்.

- தொழில் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை நீடிக்கும்.- பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தரும் முயற்சிகள்தீவிரப்படுத்தப்படும்.

- மாவட்டந்தோறும் ஆதி திராவிட, பழங்குடியினர் நலனுக்காக தொழிற்பயிற்சிமையம் அமைக்கப்படும்.

- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்வாழ்வுரிமை பேணப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+