தயாநிதி மீது வழக்கு: வழக்கறிஞருக்கு ரூ.50,000 அபராதம்-தலைமை நீதிபதி அதிரடி
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்தயாநிதி மாறனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு ரூ. 50,000 அபராதம்விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தயாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், மாறன்குடும்பத்திற்குச் சொந்தமான டிவி, பத்திரிகைகளுக்கு அதிக அளவில் விளம்பரங்கள்கொடுப்பதாகவும், இதனால் தயாநிதி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னையைச் சேர்ந்த வேப்பரசு என்றவழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி ஷா, இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன்,விளம்பரம் தேடும் பொருட்டு தொடரப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.
இதுபோன்ற வழக்குகளை அனுமதிக்க முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது.
உள் நோக்கத்திற்காக, விளம்பரம் தேடுவதற்காக மனு தாக்கல் செய்த வேப்பரசுவுக்குரூ. 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையில், ரூ. 25,000த்தைஅமைச்சர் தயாநிதி மாறனுக்கும், மீதமுள்ள 25,000 ரூபாயை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் வேப்பரசு மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறோம்என்று அதிரடி உத்தரவிட்டார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலன், தமிழக அரசின்தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் ஆகியோர் குறுக்கிட்டு, பார் கவுன்சில்நடவடிக்கையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அந்த உத்தரவை மட்டும் தலைமை நீதிபதி வாபஸ் பெற்றார்.












Click it and Unblock the Notifications