For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தர்ப்பவாத கருணாநிதி: வைகோ பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பதவிக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு, ஒவ்வொரு முறையும் ஒருகட்சியுடன் சேரும் திமுகதான் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுகவின் தேர்தல் பிரகடன பொதுக் கூட்டம் அமைந்தகரை புல்லாரெட்டிஅவென்யூவில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தேர்தல்அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு வைகோ பேசினார்.

வைகோவின் அனல் பறக்கும் பேச்சிலிருந்து சில பொறிகள்:

இங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கூட்டம், தேர்தல் முடிவு எப்படிஇருக்கப் போகிறது என்பதையே காட்டுகிறது. இது தொண்டர்கள் உருவாக்கியகூட்டணி.

எந்த இயக்கத்துக்காக உழைத்தேனோ, அந்த இயக்கத்திலிருந்து கொலைப்பழிசுமத்தப்பட்டு, மலை உச்சியில் இருந்து தூக்கி எறிவது போல என்னைத் தூக்கி வீசினர்.அப்போது ஒரு தாயைப் போல மடியில் ஏந்தி என்னை தாங்கிப் பிடித்தவர்கள் இந்தத்தொண்டர்கள்தான்.

அவர்கள் எடுத்த ஒருமித்த முடிவு காரணமாகத்தான் அதிமுக கூட்டணியில் எங்களைஇணைத்துக் கொண்டோம்.

நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற வைகோ ஒன்றும்தற்குறி அல்ல.

தாயகத்துக்காக உழைக்கும் ஊழியக்காரன். தமிழக மக்களுக்காக உழைப்பவன்.பொது நல சேவகன். மக்களை நீதிபதியாக கருதி எனது நியாயத்தை சொல்கிறேன்.தீர்ப்பு வழங்க வேண்டியது அவர்கள்தான்.

எனது பொது வாழவில் பிழைகள் இருந்திருக்கலாம், சறுக்கல்கள் நேர்ந்திருக்கலாம்.ஆனால் நான் நேர்மை தவறியதில்லை, நாணயம தவறியதில்லை, ஒழுக்கம்தவறியதில்லை, கொள்கை தவறியதில்லை. மாணவ பருவத்தில் இருந்தேஅண்ணாவின் கொள்கைக்காக பாடுபட்டு வருபவன்.

நம்மைப் பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார்கள். அவர்களுக்குப் பதில்அளிக்க வேண்டியது எனது கடமை.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு நாங்கள் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டபோது, எங்களைப் பார்த்து பண்டாரப் பரதேசிகள் உள்ளே நுழையமுயற்சிக்கிறார்கள். அவர்கள் நச்சுப் பாம்புகள், அடித்து விரட்டுங்கள் என்றுகருணாநிதி பேசினார்.

ஆனால் அடுத்த 12 ஆண்டு காலத்திற்குள் எந்த அடிப்படையில் பாஜகவோடு கூடிக்குலவினார்கள்?

எந்த அடிப்படையில் திமுக உங்களுடன் கூட்டணி அமைக்கிறது என்றுவாஜ்பாயியிடம் கேட்டேன். மந்திரி பதவி தர வேண்டும் என்று நிபந்தனைவிதித்துள்ளார்கள் என்றார்.

விஷப் பாம்பு, பண்டாரம், பரதேசி, விரட்டி அடியுங்கள் என்று கூறி வாக்காளர்களிடம்ஓரம்கட்டி விட்டு, பாஜகவை ஆதரித்தது விரோதம் இல்லையா, சந்தர்ப்பவாதம்இல்லையா?

பொடாவில் கைதாகி நான் சிறையில் இருந்தேன். 2வது முறையாக என்னைப் பார்க்ககருணாநிதி வந்தபோது, காங்கிரஸுடன் கூட்டணி சேர பேசிக் கொண்டிருக்கிறோம்என்று என்னிடம் கூறினார்.

நான் திடுக்கிட்டேன். பாஜக அமைச்சரவையில் இருந்து கொண்டு காங்கிரஸுடன்கூட்டணி பேசியது சந்தர்ப்பவாதம் இல்லையா?

பொடாவில் என்னை சிறையில் அடைத்த அதிமகவுடன் கூட்டணியா என்றுகேட்கிறார்கள். பொடா சட்டத்தை கொண்டு வந்தது பாஜகதான். அதை நான்ஆதரித்தது தவறுதான்.

கருணாநிதி மீது தொடரப்பட்ட சர்க்காரியா கமிஷன் வழக்கை வாபஸ் பெற துடியாய்த்துடித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் கதவைத் தட்டினார்கள். இந்திராவின் மகன் சஞ்சய்காந்தியின் வீட்டுக் கதவைத் தட்டியது திமுக.

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்கள். எந்தக் கட்சி திமுகவை அழிக்கநினைத்ததோ, அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார்கள். இது சந்தர்ப்பவாதம்இல்லையா?

திருச்சியில் திமுக மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, குமரி மாவட்ட மதிமுகசெயலாளர் ரத்தினராஜுவைத் தொடர்பு கொண்டு, திமுகவில் சேர்ந்து விடுங்கள்,நாகர்கோவில் தொகுதியைத் தருகிறோம் என்று பேரம் பேசினர். அவர் பதறிப் போய்என்னைத் தொடர்பு கொண்டு, பார்த்து இருங்கள், கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள்என்றார்.

இப்போது மத்தியில் இருக்கும் தமிழக அமைச்சர்களால் தமிழகத்துக்கு எந்த பலனும்இல்லை. இந்த அமைச்சர்களை ஒரு குடும்பத்தின் நலனுக்கு மட்டுமேபயன்படுத்துகிறார்கள். அதை நாங்கள் எதிர்த்தோம்.

தங்கள் குடும்ப தொலைக்காட்சியின் வளர்ச்சிக்காக அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்துகிறார்கள். 10 நாட்களுக்கு முன்பு, அவர்கள் குடும்ப டிவிக்கு நேரடிஒளிபரப்பு செய்ய விதிமுறைகளை மீறி 10 வாகனங்களுக்கு அனுமதிகொடுத்துள்ளனர். இதை குற்றச்சாட்டாகவே சொல்கிறேன்.

அவர்கள் நடத்தும் கேபிள் இணைப்பு மூலம் டெலிபோன், செல்போன், இன்டர்நெட்என்று அனைத்து தகவல் தொடர்பையும் வழங்குகின்றனர். இதற்கு வசதியாகஐ.எஸ்.டி. அனுமதி பெற கட்டணம் ரூ. 100 கோடி என்று இருந்ததை தங்கள்அதிகாரத்தைப் பயன்படுத்தி ரூ. 3 கோடி என்று ஆக்கி விட்டார்கள்.

இவர்கள குடும்ப டிவி இந்தத் துறையில் நுழையப் போகிறது என்பதால்தான்கட்டணத்தை இவ்வாறு குறைத்து விட்டனர்.

எனது பிரசாரத்தின்போது திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் சொல்வேன்.அதற்காக என் மீது தாக்குதல் நடத்தப்படலாம். ஆனால் வன்முறைக்கு அஞ்சுபவன்அல்ல இந்த வைகோ. எந்த தியாகத்திற்கும் நான் தயார். அதிமுகவுக்கு அரணாகஇருப்போம் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X