திருவிடைமருதூர்: திமுக-பாமக மோதல் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

திமுகவினரின் போக்கைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்பாமகவினர் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இதனால் அங்கு திமுகவினரும், பாமகவினரும் இணைந்து செயல்பட முடியாத நிலைஅங்கு உருவாகி வருகிறது.

திருவிடைமருதூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ளதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திமுக போட்டியிடவில்லை என்பதைஅறிந்ததும் ஆத்திரமடைந்த ஜெயராமன் என்ற திமுக தொண்டர், ஓட்டளிக்கபயன்படுத்தும் ஆள்காட்டி விரலைத் துண்டித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பாமகவை எதிர்த்து திமுகவினர் ஆங்காங்கே சுவர் விளம்பரம் செய்வதும்,போஸ்டர்கள் ஒட்டுவதுமாக உள்ளனர்.

இதனால் பாமகவினர் கோபமடைந்துள்ளனர். திமுகவினருக்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில், சேந்திரபாலபுரம் என்ற இடத்தில் பாமகவினர் மொட்டை அடித்துக்கொண்டனர். அப்போது திமுகவைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

திமுகவினர் தங்களது போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாமகவினர்கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவவிட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளில்கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும என்றும் பாமக மற்றும் வன்னியர்சங்கம் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+