பெண் போலீசுடன் செக்ஸ்: போட்டா போட்டியில் காவலர் கொலை,எஸ்ஐ கைது
நெல்லை:
பெண் போலீசுடன் உல்லாசமாக இருப்பதில் போட்டி வந்ததால் போலீஸ்காரர் ஒருவர்மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சப்இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாளையம்கோட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தவர் சிவராமன்(35). நேற்று முன்தினம் அதிகாலை வண்ணாரப்போட்டை பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள வணிக வளாகம் முன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.ஆபத்தால நிலையில் இருந்த சிவராமனை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிவராமன் இறந்தார். இது குறித்து வழக்கு பதிவுசெய்ய வேண்டிய எஸ்.ஐ. செந்தில்நாதன், சிவராமன் விபத்தில் இறந்ததாக வழக்குபதிவு செய்ய திட்டமிட்டார்.
ஆனால், ரகசிய பிரிவு போலீசார் சிவராமன் இறந்தததில் மர்மம் இருப்பதாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் எஸ்.ஐ.செந்தில்நாதன், போலீஸ்காரர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:
வணிக வளாகத்தின் 4வது மாடி அறையில் எஸ்ஐ செந்தில்நாதன், போலீஸ்காரர்கள்சந்திரசேகர், சிவராமன் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடன் பாளையம்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும்பெண் போலீசும் உடனிருந்தார். அவரிடம் யார் முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டுஉல்லாசமாக இருப்பது என்பது தொடர்பாக எஸ்ஐ செந்தில்நாதனுக்கும், போலீஸ்காரர்சிவராமனுக்கு தகராறு ஏற்பட்டது.
இதில் எஸ்ஐ செந்தில்நாதனும், போலீ ஸ்காரர் சந்திரசேகரும் சேர்ந்து சிவராமனைமாடியிலிருந்து தள்ளி கொலை செய்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் "சிவராமனை மாடியில் இருந்து கீழேதள்ளியது போலீஸ்காரர் சந்திரசேகர் தான் என்று எஸ்ஐ செந்தில்நாதனும், "எஸ்ஐ தான்சிவராமனை அடித்து தள்ளிவிட்டார் என்று போலீஸ்காரர் சந்திரசேகரும் என்றுகூறியுள்ளனர்.
இதையடுத்து எஸ்.ஐ. செந்தில்நாதன், போலீஸ்காரர் சந்திரசேகர், வணிக வளாகஉரிமையாளர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை பகுதியிலிருந்து கிளம்பும் அந்த இன்னொரு ஜெயலட்சுமி யார் என்பதுபோலீஸ் விசாரணையில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications