1,300 ஆண்டுகள் முன் சுனாமியால் அழிந்த முருகன் கோயில் கண்டுபிடிப்பு
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே கி.பி. 2ம் நூற்றாண்டை சேர்ந்த முருகன் கோயில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அடுத்த சாளுவன் குப்பத்தில் 2005ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறையினர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது 2 தூண்கள்,கல்வெட்டுக்கள், அகல் விளக்குகள், மற்றும் சங்க காலக் கூரை ஒடுகள் தென்பட்டன.செங்கல்களும், பெரியகோயில், சுற்றுச்சுவர் தூண்களும் காணப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது சிறியகோயில் போன்ற அமைப்பு பூமிக்கு மேலே தெரிந்தது.
இதைத்தொடர்ந்து இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டது.அப்போதுதான் கி.பி. 2ம் நூற்றாண்டை சேர்ந்த முருகன் கோயில் புதையுண்டுஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேற்கொண்ட பணிகளில் சுற்றுமாளிகை, சுற்றம்பலம், கல்லில் ஆன வேல், குறத்தி குத்து உள்ளிட்டவை வெளியில்தென்பட்டன.
மேலும் வெண்கல சிலையும், சுடுமண்ணால் ஆன குறத்தி நடமாடும் வகையில் 5பெண்களில் சிலைகளும் கிடைத்தன. முருகன் கோயில்களில் அக்காலத்தில்குறத்திகளின் நடனம் நடைபெற்றதற்கு இந்த சிலைகளே சான்று எனவும்கூறப்படுகிறது.
தமிழகத்தில் கட்டட கற்கள் கண்டுபிடிப்பற்கு முன்பே இக்கோயில்கட்டப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இது குறித்து சென்னை தொல்பொருள்ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
இந்த சங்ககால கோயில் சாஸ்திர சம்பிரதாயங்கள் தோன்றுவதற்கு முன்பேகட்டப்பட்டிருக்கலாம்.
பெரும்பாலன கோயில்களுக்கு கிழக்கு வாசல் தான் அமைந்திருக்கும். ஆனால்இக்கோயிலுக்கு வடக்கு வாசல் அமைந்துள்ளது.
கோயிலில் சிலை இருந்ததற்கான அம்சங்கள் உள்ளன. ஆனால் சிலை இல்லை.ஆனால் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை சுனாமி ஏற்பட்டதால் இக்கோயில்அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications