அதிமுகவுக்கு ஆதரவு: பு.தா. இளங்கோவன்
சிதம்பரம்:
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் கொடுக்காவிட்டாலும் கூட, பாமகவைத்தோற்கடிக்க தீவிரமாக பாடுபடுவோம் என்று பாட்டாளி முன்னேற்றக் கழகம்கட்சியின் தலைவரான பு.தா.இளங்கோவன் கூறியுள்ளார்.
பாமக முன்னணித் தலைவர்களில் ஒருவரான பு.தா. இளங்கோவன் சமீபத்தில்பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த இளங்கோவன், ஜெயலலிதாவையும்சந்தித்துப் பேசினார். இதனால் அவருக்கு தேர்தலில் சீட் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் தரப்படவில்லை.
இதனால் பு.தா.இளங்கோவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விஎழுந்தது. ஆனால் தனது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லைஎன்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசியபோது அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிடுமாறுவேண்டுகோள் விடுத்தார். அதை நான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டேன்.
மேலும் கட்சி தொடங்கி சிறிது காலமே ஆவதாலும், தேர்தலுக்கு குறுகிய காலஅவகாசம இருந்ததாலும் சீட் கேட்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்.
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும், குறிப்பாக பாமக போட்டியிடும்தொகுதிகளில் அக்கட்சியைத் தோற்கடிக்க தீவிரமாக உழைப்போம்.
டாக்டர் ராமதாஸின் 25 ஆண்டு கால முரண்பாடான அரசியல், நம்பிக்கை துரோகம்,கட்சிக்காக உழைத்தவர்களை குடும்ப நலனுக்காக புறக்கணித்தது ஆகியவற்றைமக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம். பாமகவைத் தோற்கடிப்பதேஎங்களது லட்சியமாகும்.
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றமுடிவு செய்துள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications