லீக்கிடம் பாளை தொகுதியை பறித்த திமுக
திருச்சி:
தமிழ் மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பாளையம் கோட்டைதொகுதியை சொல்லாமல் கொள்ளாமல் திமுக பறித்துக்கொண்டது. திமுகவேட்பாளராக மைதீன் கான் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசுவேன் என தமிழ்மாநில இந்தியமுஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.சட்டபை தேர்தலில் திமுக 129 இடங்களில் போட்டியிடுவதாக இருந்தது. இதன்கூட்டணி கட்சியான தமிழ்மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சி வாணியம்பாடி,பாளையம் கோட்டை, அரவரக்குறிச்சி தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில்போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலும், முஸ்லீம் லீக் கட்சியின் கட்சியில் 2வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
பாளையம் கோட்டை தொகுதியில் போட்டியிடும் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர்அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போதே பாளையம்கோட்டை வேட்பாளர்அறிவிக்கப்படாததாது குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேள்விஎழுப்பினர். இரண்டொரு நாளில் அத்தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்என கருணாநிதி தெரிவித்திருந்தார்.
தொகுதி மாற்றத்திற்கு கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள் வேட்பாளர் அறிவிப்பின்போதும் தொடர்ந்து போரட்டங்கள் நடத்தி வந்தனர். திமுக வேட்பாளர் பட்டியலுக்குஅக்கட்சியினரிடமே எதிர்ப்பு வலுத்துக்கொண்டே இருக்கிறது.
முகையூர், மற்றும் திருவிடைமருதூர் தொகுதியை மாற்றியதற்கே தொண்டர்கள்மன்றங்களை கலைத்தும், கட்சிக்கொடிகளை எரித்தும் தங்கள் கோபத்தைவெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பாளையம்கோட்டையில் தற்போது திமுக எம்எல்ஏவாக இருக்கும்மைதீன் கான், தொகுதியை முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கியதற்கு கடும் கண்டனம்தெரிவித்திருந்தார்.
எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போனதால் சுதாரித்த திமுக, நேற்று மாலை பாளையம்கோட்டையில் திமுக வேட்பாளர் மைதீன் கானே மீண்டும் போட்டியிடுவார் எனஅவசர அவசரமாக அறிவித்தது
இதன் மூலம் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 130 ஆகஉயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. தொகுதி பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள்கையெழுத்தான நிலையில் பாளையம்கோட்டையில் திமுக போட்டிடுவதாக அக்கட்சிஅறிவித்தது, முஸ்லீம் லீக் கட்சியில் பெரும் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக தலைமையிடம் பேசப்போவதாக முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்காதர்மொய்தீன் திருச்சியில் இன்று தெரிவித்துள்ளளார்.
ஒதுக்கப்பட்ட தொகுதியை எடுத்துக்கொண்ட திமுக தலைமை மீண்டும் முஸ்லீம்கட்சிக்கு வேறு தொகுதியை ஒதுக்குவதற்கு சாத்தியமே இல்லை என்றே தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications