சந்தானத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை:
பார்வர்டு பிளாக் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரான சந்தானத்திற்கு, கட்சியிலிருந்துவிலகி தன்னிச்சையாக செயல்படுவதற்கு விளக்கம் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் சமீபத்தில்சந்தானத்தை நீக்கிவிட்டு கார்த்திக்கை அக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமித்தார்.ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சந்தானம்.இந் நிலையில் சந்தானத்துக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் பிஸ்வாஸ் மனுதாக்கல் செய்துள்ளார். அதில்,
2001ம் ஆண்டு நடந்த சட்டபை தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் சந்தானத்தைஉசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றோம்.
2006ம் ஆண்டுவரை சட்டபையில் எம்எல்ஏ பதவியிலே நீடித்து வந்தார். ஆனால்சமீப காலமாக கட்சியின் நலனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு, கட்சியின்விதிகளை மீறி செயல்படுகிறார். அவரிடம் விளக்கம் கேட்டு பிப்ரவரி 1ல் நோட்டீஸ்அனுப்பினோம்.
அதற்கு சந்தானம் பிப்ரவரி 7ல் பதில் அனுப்பினார். அவரது பதிலை கருத்தில்கொண்டு அவர் மீதான விசாரணை முடியும் வரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்தோம்.
இந்நிலையில் மதுரை சப்கோர்ட்டில் இருந்து எனக்கு வந்த சம்மனில் மார்ச் 15ல்ஆஜராக வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணையன்று எங்கள் வழக்கறிஞர் ஆவணங்களை பரிசோதித்து பார்த்தபோதுபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக செயல்படுவதில் இருந்துசந்தானத்தை நான் தடுக்க கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்ததுதெரிய வந்தது.
ஆனால் இடைக்கால உத்தரவு சம்பந்தமான தகவல் கோர்ட் மூலமாகவோ அல்லதுசந்தானம் மூலமாகவே எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் கூடுதல் சப்கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு இந்த நீதிமன்றம்தடை விதிக்க வேண்டும்.
மேலும் கீழ் கோர்ட்டில் சந்தானம் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததுஅல்ல என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிஸ்வாஸ் சார்பில்வாதாடிய வழக்கறிஞர்கள் பார்வார்டு பிளாக் கட்சியின் அலுவலகம் டெல்லியில் தான்உள்ளது என்றும், சந்தானம் டெல்லியில் தான் வழக்கு தொடர முடியும் என்றும்வாதிட்டனர். மேலும் சந்தானத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக பதில் அளிக்க சந்தானத்திற்கு நோட்டீஸ்அனுப்ப நீதிபதி பானுமதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை ஏப்ரல் 7ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications