தூத்துக்குடியில் திமுகவுக்கு எதிராக சரத் ரசிகர்கள் போட்டி!
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக கூட்டணி போட்டியிடும் 7 தொகுதிகளிலும்எதிர்த்துப் போட்டியிட நடிகர் சரத்குமார் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
திமுகவில் ஓரம் கட்டப்பட்டுள்ள சரத்குமார் ரசிகர்களும், இதே காரணத்திற்காக நாடார்சமுதாயத்தினரும் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.இந் நிலையில், தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று சரத்குமாரை அவரது ரசிகர்கள்வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் தனிக்கட்சி தொடர்பாக இதுவரை சரத்குமார்எதையும் கூறாமல் அமைதியாக உள்ளார்.
இந் நிலையில் குமரி மாவட்ட சரத் ரசிகர்கள் வரும் தேர்தலில் குமரி மாவட்டத்தில்போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் காரைக்குடியில் கூட்டம் போட்டது போல சரத்குமார் ரசிகர்மன்றத்தினர் இன்று தூத்துக்குடியில் ஆலோசனை நடத்தினர்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதுஎன அம் மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களை ஓட்டு சேகரிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திமுக தற்போதுதங்களைக் கைவிட்டு விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே வரும் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் 7தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து ரசிகர்கள் போட்டியிடுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு எதிராக ரசிகர்கள் திரண்டு வரும் பின்னணியில் நாளை சென்னையில்சரத்குமார் ரசிகர் தலைமை மன்றத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்நடைபெறுகிறது.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications