"குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி மரணம்
சென்னை:
குமுதம் வார இதழை நிறுவியவர்களில் ஒருவரான பி.வி.பார்த்தசாரதி சென்னையில்மரணமடைந்தார்.
குமுதம் வார இதழை நிறுவியர்களில் ஒருவர் பி.வி.பார்த்தசாரதி. அதன் நிறுவனஆசிரியர் எஸ்.ஏ.பார்த்தசாரதிக்குப் பின்னர் கெளரவ பதிப்பாளராக இருந்து வந்தார்.சில மாதங்களாக பி.வி.பார்த்தசாரதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. 83வயதான அவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில்மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன்,இந்துமதி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, இந்து ஆசிரியர் ராம், முரளி,காவல்துறை அதிகாரிகள், நடிகர்கள் விக்ரம், எஸ்.வி.சேகர், பல்வேறு அரசியல்தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா பார்த்தசாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்திவெளியிட்டுள்ளார். பார்த்தசாரதியின் உடல் செவ்வாய்க்கிழமை தகனம்செய்யப்படுகிறது.
1925ம்ஆண்டு பிறந்த பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஆவார். 1947ம் ஆண்டு குமுதம்பத்திரிக்கையை இவரும், எஸ்.ஏ.பார்த்தசாரதியும் சேர்ந்து தொடங்கினர். இவர்பதிப்பாளராக பணியாற்றினார், எஸ்.ஏ.பார்த்தசாரதி ஆசிரியராக இருந்தார்.பி.வி.பார்த்தசாரதிக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications