சரத் விலகுவாரா?: ரசிகர்கள் கோரிக்கை
சென்னை:
திமுகவை விட்டு உடனடியாக சரத்குமார் விலக வேண்டும். இல்லாவிட்டால் திமுககூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேலை செய்வோம் என்று நடிகர்சரத்குமார் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திமுகவில் சரத்குமார் ஓரம் கட்டப்பட்டு உள்ளதால் அவரும், அவரது ரசிகர்களும்பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் எனசரத்குமாரும், அவரது ரசிகர்களும், அவர் சார்ந்த நாடார் சமூகத்தினரும் பெரும்எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அது கிடைக்கவில்லை.இந்த நிலையில் சரத்குமார் ரசிகர்கள் தூத்துக்குடியில் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டிதங்களது பலத்தை காட்டினர். இதை மனதில் வைத்தாவது வருகிற சட்டசபைத்தேர்தலில் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு சிலதொகுதிகளை திமுக தலைமை கொடுக்கும் என சரத்குமார் எதிர்பார்த்தார். ஆனால்அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதனால் சரத்குமார் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில்சென்னையில் சரத்குமார் ரசிகர்கள் மன்ற மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த 1996ம் ஆண்டிலிருந்துசரத்குமார் ரசிகர்கள் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். கடுமையாகஉழைத்தும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு திமுக போதிய அங்கீகாரத்தைக்கொடுக்கத் தவறி விட்டது. சரத்குமாரையும் அது புறக்கணித்து விட்டது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று சரத்குமார்கேட்டிருந்தார். ஆனால் திமுக தலைமை அதை நிராகரித்து விட்டது. சரி, தூத்துக்குடிதொகுதியை மட்டுமாவது தனது ஆதரவாளர்களுக்கு கொடுங்கள் என்று கட்சித்தலைமையிடம் கெஞ்சிப் பார்த்தார் சரத்குமார். ஆனால் அதையும் திமுக தலைமைநிராகரித்து விட்டது.
எனவேதான் அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்தவற்காக இந்தக்கூட்டத்தைக் கூட்டினோம். சரத்குமார் உடனடியாக திமுகவிலிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிட்டால் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்காககடுமையாக பாடுபடுவோம்.
கூட்டத்திற்கு சரத்குமாரும் வருவார் என எதிர்பார்த்து காத்துள்ளோம். அவர்திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும் என்றார் அவர். சரத்குமார் ரசிகர்கள்கூட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது. இக்கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள்எடுக்கப்படும் எனத் தெரிவதால் திமுக மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications