பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
பழனி:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகுதண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாகநடந்தேறியது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3வது வீடு பழனி. இங்குள்ள அருள்மிகுதண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.இதற்காக ரூ. 5 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த31ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. 1ம் தேதி யாக சாலை வேள்விகள்தொடங்கின.
கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவுமகாலட்சுமி பூஜை நடந்தது. பின்னர் 9 சுமங்கலிப் பெண்களை வைத்து வழிபாடுநடந்தது.
இந்தப் பூஜைகளில் மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், கவுமார மட ஆதீனம்உள்ளிட்டோரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இன்று காலை 6.30 மணிக்கு 4ம் கால வேள்வி தொடங்கியது. திருமேனித் தூய்மை,மங்கல நாண் அணிவித்தல், பல்பொருள் வேள்வி முதலியவை நடந்தன.
காலை 9.45 மணிக்கு திருக்குடங்கள் ஞானத் திருவுலா நடந்தது.
பத்து மணிக்கு மூலவர் தங்க விமானம், ராஜகோபுரம, பரிவார கோபுரங்களுக்குதிருக்குட புனித நீராட்டு நடந்தது.
10.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர்தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இன்று மாலைசண்முகர், வள்ளி-தெய்வானை திருக் கல்யாணம், கிரி வீதியில் முத்துக்குமாரசுவாமிவீதியுலாவும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்து போக்குவரத்து வசதிகள்செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications