விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்: சரத்குமார்
சென்னை:
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக் கூடாது என்று ரசிகர்கள் கூறியுள்ளதுகுறித்து விரைவில் நல்ல முடிவாக அறிவிப்பேன் என்று நடிகர் சரத்குமார்கூறியுள்ளார்.
அகில இந்திய நடிகர் சரத்குமார் ரசிகர் நிற்பணி மன்ற அவசர ஆலோசனைக் கூட்டம்சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்கு மன்றத் தலைவர்ஏ.என்.சுந்தரேசன் தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. 1996ம் ஆண்டு முதல்திமுகவின் உயர்வுக்காக பாடுபட்டு வரும் சரத்குமாரின் உணர்வுகளுக்கும்,உழைப்புக்கும் உரிய மரியாதையை, கெளரவத்தை அளிக்க திமுக தவறி விட்டது.
எனவே இதனால் மனதளவில் புண்பட்டுப் போயுள்ள ரசிகர்களின் உணர்வுகளைமதிக்கும் வகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு சரத்குமார் பிரசாரம் செய்யக் கூடாது.
இதுதொடர்பான முடிவை சரத்குமாருக்கு தெரிவித்து அவர் எடுக்கும் முடிவுக்குகட்டுப்படுவது என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தீர்மானத்துடன் சுந்தரேசன் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் சரத்குமாரின்வீட்டுக்கு மாலையில் சென்றனர். (அதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுகுமாருக்கு தெரியாதாம்).
அங்கு சரத்குமாரை சந்தித்து அவர்கள் தீர்மானத்தைக் கொடுத்தனர். பின்னர்அவர்களுடன் குமார் தீவிர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சரத்குமார் கூறுகையில், நான் ஒரு வாரமாக ஊரில் இல்லை. காலையில் தான்வந்தேன். ரசிகர்களின் கூட்டம் குறித்து தகவல் தெரிந்து கொண்டேன். (நம்பச்சொன்னா நம்புறோம்).
அவர்களது கருத்தை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.அதை நான் மதிக்கிறேன். என்னை வளர்த்தது ரசிகர்கள்தான். நான் பிரசாரம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனது முடிவு என்ன என்பதை மன்றத் தலைவருடன் கலந்து பேசி அறிவிக்கிறேன்என்றார் குமார்.
ரசிகர்களின் கோரிக்கையை காரணம் காட்டி, யாருக்கும் பிரசாரம் செய்ய மாட்டேன்என்று சரத்குமார் அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications