10 மணி பிரசாரம்-கருணாநிதி மீது ஜெ புகார்
தஞ்சாவூர்:
திமுக தலைவர் கருணாநிதியின் தலையீட்டின் காரணமாகவே, கிராமப் புறங்களில்11மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
பிரசாரத்திற்கு இடையே, தஞ்சையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்ததேர்தலில் காணப்பட்ட எழுச்சி மக்களிடம் இப்போது இல்லை. மாறாக, அதை விடஅதிக எழுச்சியைக் காண முடிகிறது.இரவு 11 மணி வரை ஊரகப் பகுதிகளில் பிரசாரம் செய்யலாம், நகர்ப் புறங்களில் 10மணிவரை பிரசாரம் செய்யலாம் என்று முன்பு கூறியிருந்தனர்.
ஆனால் எனது சுற்றுப் பயணத்தை அறிவித்து, மார்ச் 31ம் தேதி நான் கிளம்புவதற்குமுன்பு, 30ம் தேதி அவசர அவசரமாக எல்லாப் பகுதிகளிலும் 10 மணிக்கு மேல்பிரசாரம் செய்யக் கூடாது என்ற தடையை அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு திமுகதான் காரணம். திமுக தலைமையால்பிரசாரம் செய்ய முடியவில்லை. அவரால் (கருணாநிதி) அலைய முடியவில்லை.ஆகவே நிச்சயம் தோல்வி என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் நான் தமிழகம் முழுவதும் புயல் வேகத்தில் பிரசாரம் செய்ய காத்திருக்கிறேன்.இரவு 11 மணி வரை என்ற அவகாசத்தையொட்டியே எனது பிரசாரத் திட்டம்வகுக்கப்பட்டிருந்தது.
அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுகிறது, கூட்டணிக் கட்சிகளுக்காகவும் நான்பிரசாரம் செய்ய வேண்டும். இப்போது 10 மணியோடு மடிக்க வேண்டும் என்பதால்என்னால் பல இடங்களுக்குப் போக முடியவில்லை.
2 ரூபாய்க்கு அரிசி, இலவச டிவி, 2 ஏக்கர் நிலம், சமையல் எரிவாயு அடுப்பு எனசாத்தியமே இல்லாத திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்கருணாநிதி.
இவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் இப்போதே பேசஆரம்பித்து விட்டார்கள்.
அரிசி குறித்து விளக்கம் அளித்த கருணாநதி, மத்திய அரசிடம் சலுகை பெற்று, சிறப்புஉதவிகளை பெற்று இந்த திட்டங்களை செயல்படுத்துவேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், மிகத் தெளிவாகசொல்லியிருக்கிறார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், கூறப்பட்டுள்ள உறுதிமொழிகள், அக்கட்சியின்தனிப்பட்ட வாக்குறுதிகள். அது காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தாது. எங்களுக்கும்அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விட்டார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கட்சியின் அனுமதியைப் பெற்றுத்தான் அவ்வாறுபேசியுள்ளார். மேலும், திமுக அறிவித்த, கருணாநிதி அறிவித்த, இந்தத் தேர்தல் நிேரவாக்குறுதிகளை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் கருணாநிதி மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை செயல்படுத்தமுடியாது, இந்தத் திட்டங்கள் நிறைவேறாது என்பது நிரூபணமாகி விட்டது என்றார்ஜெயலலிதா.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications