மகளிர் குழுக்களுக்கு 120 கோடி: திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சேலம்மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் ரூ. 120 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தேர்தல் ஆணையத்திற்குப் புகார்அனுப்பியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு இதுதொடர்பாக ஆற்காடு வீராசாமிஅனுப்பியுள்ள புகாரில்,

சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்விதிமுறைகளை மீறி ரூ. 120 கோடிக்கான வரைவுக் காசோலைகளை வழங்கியுள்ளார்.

இந்த முறைகேட்டில் மாவட்ட திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கும் பங்கு உள்ளது. இது அப்பட்டமானதேர்தல் விதி மீறல்.

ஆளும் கட்சியான அதிமுக தங்களுக்குத் தேவையான அதிகாரிகள் மூலமாகவோஅல்லது நிர்ப்பந்தம் மூலமாகவோ பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அதில்இதுவும் ஒன்று.

எனவே தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார் வீராசாமி.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+