சென்னை-கோலாலம்பூருக்கு சொகுசு கப்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை- கோலாலம்பூருக்கு புதிய சொகுசு கப்பல் போக்குவரத்துதுவங்கப்படுவதாக சென்னை துறைமுக பொறுப்புக்குழு தலைவர் சுரேஷ்தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,சென்னை துறைமுகம் முதன் முறையாக 4 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் டன்சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்தில் சொகுசுகப்பல் முனையம் தொடங்கப்பட்ட பிறகு கப்பல்கள் வரத்துவங்கியுள்ளன.
கடந்த நிதியாண்டில் 9 சொகுசு கப்பல்கள் வந்தன. இதனால் சென்னை துறைமுகம்சொகுசு கப்பல்களின் நுழைவாயிலாக மாறிவருகிறது.
சாம்ராட் குருப் என்ற நிறுவனம் மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கும்சென்னைக்கும் இடைய சொகுசு கப்பல் போக்குவரத்தை துவங்க லைசென்ஸ் கோரிவிண்ணப்பித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைத்து விடும். சொகுசுகப்பல் போக்குவரத்தும் உடனடியாக தொடங்கப்பட்டு விடும் என அவர்தெரிவித்தார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications