For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அல்ல முமுக: எஸ்.எஸ்.சந்திரன் கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

தாம்பரம்:

திராவிட முன்னேற்ற கழகம், முதியோர் முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது எனஅதிமுக எம்.பியான எஸ்எஸ்.சந்திரன் கூறினார்.

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வளர்மதி, தாம்பரம் தொகுதிமதிமுக வேட்பாளர் பாலவக்கம் சோமு ஆகியோரை ஆதரித்து நடிகர்எஸ்.எஸ்.சந்திரன் பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஜிப்பில் நின்றபடியே எஸ்.எஸ்.சந்திரன் பேசியதாவது,

அதிமுக கூட்டணி சாதரண கூட்டணி அல்ல, வலுவுள்ள 7கட்சி கூட்டணி.எங்களுடைய அணியில் கிரிகெட் வீரர்களான டோனி, டிராவிட் போல பலர்இருக்கிறார்கள்.

நாங்க ஜெயிச்சுகிட்டே இருப்போம். திமுக முதியோர் முன்னேற்ற கழகமாகத்தான்உள்ளது. வைகோ கேட்ட கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் தரவில்லை. கருணாநிதிகடந்த ஆட்சியில் 36 ஆயிரம் கோடி கடன் வைத்து சென்றார்.

ஜெயலலிதா கடனை அடைத்து இலவச சைக்கிள், பாடப் புத்தகங்கள் உட்படபல்வேறு சலுகைகளை வழங்கினார். இந்தியாவிலேயே ரூ.3.50க்கு அரிசி விற்கும்மாநிலம் தமிழகம் ஒன்றுதான்.

இன்றைக்கு கலர் டிவி, 2 ஏக்கர் நிலம் தருவேன் என்கிறார் கருணாநிதி, பொய்சொல்வதற்கு அளவே கிடையாதா?, விட்டால் ஆளுக்கு 3 வீடு, அம்பாசிடர் காரும்தருவேன் என்று சொல்வார். கருணாநிதியின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

கவர்ச்சியால் ஆட்சிக்கு வந்தார்கள் என்று நடிகர் பாக்கியராஜ் பேசுகிறார். பாக்கியராஜ்உயிரோடு இருப்பதற்கே எம்ஜிஆர் தான் காரணம். பாக்கியராஜின் ரகசியம் எனக்குதெரியும் என்றார்.

மைக் பிடுங்கப்பட்ட முரளி:

இதற்கிடையே பொன்னேரியில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் விதிமுறைகளை மீறி மைக்கைப் பிடித்து தமில் மக்கலே அஎன்று தனது பாஷையில் பேசஆரம்பித்த அதிமுக நடிகர் முரளியிடம் போலீசார் மைக்ப்ை பிடுங்கிச் சென்றனர்.

இதையடுத்து அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, மைக் செட்டுக்கும் மேடைக்கும் போன வயர்களையும்போலீசார் அறுத்துப் போட்டனர்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X