அன்பரசு மகன் பண மோசடி: சோனியாவுக்கு பைனான்சியர் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் எம்.பி. அன்பரசுவின் குடும்பம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில்உள்ளதால், அன்பரசு மகனுக்கு சோளிங்கர் தொகுதியில் போட்டியிடஅளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி காங்கரிஸ்தலைவர் சோனியா காந்திக்கு, சினிமா பைனான்சியர் குல்சந்த் போத்ரா கடிதம்அனுப்பியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு. வேலூர் மாவட்டம்சோளிங்கர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது நியமனத்திற்கு சோளிங்கர் பகுதி காங்கிரஸார் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்குவந்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைக்காட்டினர்.

இந் நிலையில், அருள் அன்பரசு மீது பண மோசடி புகார் இருப்பதாக கூறி காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு, பிரபல பைனான்சியர் குல்சந்த் போத்ரா கடிதம்அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், முன்னாள் எம்.பி. அன்பரசு, அவரது மனைவி கமலா, மகன் அருள்அன்பரசு ஆகியோர் என்னிடம் ரூ. 36 லட்சம் கடன் வாங்கினர். ஆனால் வாங்கியபணத்தைத் திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு இன்னும் முடியவில்லை, நலுவையில் உள்ளது. இப்படிப்பட்டநிலையில் அருள் அன்பரசுக்கு சோளிங்கர் தொகுதியில் போட்டியிடஅளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று போத்ரா கூறியுள்ளார்.

நடிகை ரோஜா உள்ளிட்ட பலருக்குப் பணம் கொடுத்து அவர்கள் மீது வழக்குப்போட்டு பிரபலமானவர் போத்ரா என்பது நினைவிருக்கலாம்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+