ஹாங்காங்கில் வசிப்பவருக்கு காங்கிரசில் சீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹாங்காங்கில் வசிப்பவரிடம் ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துவிட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸார் இன்று சென்னை சத்தியமூர்த்திபவனில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் என்றாரே வித்தியாசமான காட்சிகள் தானே. இக் கட்சியின் பல வேட்பாளர்களுக்கும்தொகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வேலூர், சோளிங்கர், தி.நகர் என பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த பல்வேறு கோஷ்டிகள் கட்சியின் போக்கைக் கண்டித்து ஆங்காங்கேபோராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந் நிலையில் ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பரபரப்பானகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ள ஹசன் அலிக்கு எதிராக அத்தொகுதி காங்கிரஸார் இன்றுசத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் குதித்தனர்.

ஹசன் அலி தமிழகத்திலேயே வசிக்கவில்லை. அவர் ஹாங்காங்கில் இருக்கிறார்.அப்படிப்பட்டவருக்கு சீட் கொடுத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர்கள்,தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் ஹசன் அலியிடமிருந்து ரூ. 50லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு சீட் கொடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸாரின் போராட்டம் காரணமாக சத்தியமூர்த்தி பவனில்பரபரப்பு நிலவியது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+