இலங்கை-கண்ணி வெடி தாக்குதலில் 4 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்பாணத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 4 இலங்கை ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும்இருவர் காயமடைந்தனர்.
ராணுவ வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தக் கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாக ராணுவசெய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார். இத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் காரணமாகஇருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சு தொடங்கிய பின் நடந்துள்ள முதல்பெரிய தாக்குதல் இதுவாகும்.
கடந்த 7ம் தேதி திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான விக்னேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட இருந்த நிலையில்விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கை ராணுவத்தின் உதவியுடன் தான் அந்தக் கொலை நடந்ததாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இன்றைய தாக்குதல் நடந்துள்ளது.
ஜெனீவாவில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மீண்டும் அமைதிப் பேச்சு நடக்கவுள்ள நிலையில் இந்தத்தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications