For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் அதிகாரிகளை ஓரங்கட்டிய ஜெ-ப.சி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

காட்டுமன்னார்கோவில்:

ஜெயலலிதாவின் ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி தராமல் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பதவி இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர் என மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் கூறினார்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் கூறியதாவது:

கருணாநிதி ஆட்சியில் தொழில்துறை பெருக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் எந்தத் தொழிற்சாலையும்இங்கு வரவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏனென்றால், 5 வருடத்தில் 5 தலைமைச் செயலாளர்கள், 4 உள்துறைச் செயலாளர்கள், 5 டிஜிபிக்கள், 9தொழிற்துறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இது கோமாளி ஆட்சியா இல்லையா?

ஜெயலலிதாவின் ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி தராமல் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பதவி இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.

2 தலித் அதிகாரிகளுக்கு கலெக்டர் அந்தஸ்து இருந்தும் அவர்களை கலெக்டர் பதவியில் ஜெயலலிதாஅமர்த்தாதது ஏன்? தலித்களுக்கு பல கொடுமைகளைச் செய்துவிட்டு இப்போது திருமாவளவனுடன் கூட்டுசேர்ந்து அதை மறைக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா.

சேது சமுத்திரத் திட்டம வரவே கூடாது என்று வாதாடிய ஜெயலலிதாவுடன் எப்படி வைகோ கூட்டு சேர முடிந்ததுஎன்று கேட்டார் சிதம்பரம்.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X