சரத் அதிமுகவுக்கு தாவுவது எப்போது?
சென்னை:
திமுகவிலிருந்து விலகும் முடிவை நடிகர் சரத்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மமத்திய மந்திரி பதவி வாங்கித் தராததால் திமுகவை விட்டு விலகியுள்ளார் அதிமுகவில் இருந்து திமுகவுக்குவந்து எம்பியான சரத்குமார். அவர் அதிமுகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.
![]() |
இது குறித்து கருணாநிதி கூறுகையில்,
இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரைதிருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில் சரத்குமார் கலந்து கொண்டு பேசுகையில்,சாகும் வரை நான் திமுகவில்தான் இருப்பேன். எனது இறுதி ஊர்வலத்தில் என் மீதுதிமுக கொடிதான் போர்த்தப்பட்டிருக்கும் என்று பேசினார்.
அதற்கிடையே, இந்த இரண்டு மாதங்களுக்குள் அவருக்கு மனமாற்றம் ஏற்படக் கூடியஎந்த நிகழ்ச்சி நடந்து விட்டது என்று நான் ஆச்சரியம் கலந்த சிந்தனையில்மூழ்கியிருக்கிறேன்.
அவர் எடுத்துள்ள முடிவை அவரே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.தன்னை திமுகவில் அவமானப்படுத்தியதாக சரத்குமார் கூறியிருக்கிறாரே என்றுகேட்டதற்கு,
அவரிடமே கேளுங்கள்.. என்ன அவமானப்படுத்தினார்கள் என்று என பதிலளித்தார்.
இதற்கிடையே தனது கணவரின் முடிவு குறித்து இன்னும் சில நாட்களில் தனதுகருத்தைத் தெரிவிப்பதாக சரத்குமாரின் மனைவியும், சன் டிவியில் பல்வேறுதொடர்களை தயாரித்து வழங்கி வருபவருமான ராதிகா கூறியுள்ளார்.
குமார் விலகியதால் ராதிகாவின் ராடன் டிவி நிறுவனம் சன் டிவியிலும் அதன் பிறமொழி தொலைக்காட்சிகளிலும் நடத்தி வரும் செல்வி, தங்க வேட்டை உள்ளிட்டதொடர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
ஆனால், அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டியதே இல்லை. ராதிகாவின்தொடர்கள் வழக்கம்போல் தொடரும் என சன் டிவி வட்டாரம் தெளிவாக்கியுள்ளது.
இதற்கிடையே இன்றிரவு தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடிக்கும் முதல்வர் ஜெயலலிதா, ஆறுமுகநேரியில்தாரங்கதாரா கெமிக்கல்ஸ் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை முழுவதும் அவர் அங்கேயேதங்கியிருக்கப் போகிறார். அப்போது ஜெயலலிதாவை சரத்குமார் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது குமார் அதிமுகவில் இணையலாம் அல்லது அல்லது அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடசம்மதிக்கலாம் என்று தெரிகிறது.
ரூ. 20 கோடி வரை கடன் உள்ள சரத்குமாரை, பிரச்சனையைத் தீர்ப்பதாகச் சொல்லி அதிமுக தரப்பு வளைக்கமுயன்றதும், இதற்கு தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை அதிபர் ஒருவர் உதவி செய்ததும் நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications