விருத்தாலம் என்ன இளிச்சவாய ஊரா?: திருமா
விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர்களை விஜய்காந்த் இளிச்சவாயர்கள் என நினைத்துவிட்டார் போலும் எனவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
விருத்தாசலத்தில் திருமாவளன் பேசியதாவது:விருத்தாசலத்தில் போட்டிபோடும் விஜய்காந்த்துக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அவரது கட்சி 234இடங்களிலும் டெபாசிட் இழப்பது உறுதி. விருத்தாசலத்தைச் சேர்ந்தவர்கள் இளிச்சவாயர்கள் என விஜய்காந்த்நினைத்துவிட்டாரா?
பேசாமல் விருதாச்சலத்தை கேன்சல் செய்துவிட்டு உங்கள் சொந்த ஊரான மதுரைப் பக்கம் எங்கோயவது போய்விடுங்கள். இல்லாவிட்டால் சினிமாவுக்கே திரும்பிவிடுங்கள். அதை வைத்து குடும்பத்தையாவது காப்பற்றலாம்.
பண்ருட்டியார் பேச்சைக் கேட்டு விருத்தாசலத்தில் நிற்கிறார் விஜய்காந்த். உங்களை மலை உச்சியில் இருந்துஉருட்டி விடப் போகிறார் பண்ருட்டி என்றார்.
அறிவுமதி எச்சரிக்கை:
இதற்கிடையே தமிழக சிந்தனையாளர் பேரவை சார்பில் கடலூரில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய கவிஞர்அறிவுமதி,
திரைப்படம் மூலம் தமிழைக் கொச்சைப்படுத்தியவர் விஜய்காந்த். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தவர், விமர்சித்தவர்.
தமிழ்ப் பண்பாட்டை படங்களில் பதிவு செய்த இந்த மண்ணின் மைந்தன் தங்கர்பச்சான வருத்தம் தெரிவித்தும்கூட நியாயமற்ற முறையில் வட நாட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர் இந்த விஜய்காந்த்.
தமிழர்களின் எதிரியான அவரை ஜெயிக்க வைத்தால் தமிழர்கள், கடலூர் மாவட்டத்தைக் காறித் துப்புவார்கள்.எந்தக் கட்சியில், எந்த சாதியில் வேண்டுமானாலும் இருங்கள்.
ஆனால், நடிகர்-நடிகையின் எலி வளைக்குள் நெல் தேடும் வாழ்க்கையை வாழாதீர்கள். இந்த முறையும் நீங்கள்ஏமாந்துவிடாதீர்கள் என்றார்.
விஜய்காந்த் பதில்:
இதற்கிடையே தஞ்சாவூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய்காந்த் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் ஜாதியைப் பார்த்து விருத்தாசலத்தில் போட்டியிடவில்லை. என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். தமிழன்என்ற முறையில் தான் அங்கு போட்டியிடுகிறேன் என்றார்.
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications