தயாநிதியின் மிஸ் யூஸ்: வைகோ மீண்டும் புகார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

மத்திய தொலைத் தொடர்புத்துறையைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர் தயாநிதிமாறன் செய்துள்ள அதிகார துஷ்பிரயோகங்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பசவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில், அதிமுக வேட்பாளர் நெடுஞ்சழிெயனுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வைகோ பேசுகையில்,

தொலைத்தொடர்பு இலாகாவில் ஒரு குடும்பத்தினர் ஏக போக ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். தயாநிதி மாறன் இந்தத் துறையில் என்னென்ன அதிகார துஷ்பிரயோகம்செய்தார் என்று நான் ஏற்கனவே பட்டியலிட்டு விளக்கியுள்ளேன்.

நான் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டேன். ராஜ் டிவிக்கு யார் உரிமத்தைரத்து செய்தார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இதற்காகத்தானே உங்களதுபேரனுக்குத் தொலைத் தொடர்பு இலாகாவை கேட்டு வாங்கினீர்கள்?

மத்திய அரசு அரிசி விலையை கடுமையாக உயர்த்தியபோது அது கருணாநிதியின்கண்களுக்குத் தெரியவில்லையா?

மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தியபோது, அதனை முதன் முதலாக எதிர்த்தவர்முதல்வர் ஜெயலலிதாதான். (நீங்க எதிர்க்கலையே.. ஏன்?)

அவர் எதிர்த்ததைத் தொடர்ந்து மேலும் 6 மாநில முதல்வர்களும் எதிர்ப்புக் குரல்கொடுத்தார்கள். மத்திய அரசு மானியத்தைக் குறைத்தாலும் ரேஷன் மூலம்வழங்கப்படும் அரிசியின் விலையை உயர்த்த தமிழக அரசு முயலவில்லை.

இதனால் அரசுக்கு 1,350 கோடி ரூபாய் நஷ்டம். நிலைமை இப்படி இருக்கும்போதுகிலோ அரிசியை எப்படி 2 ரூபாய்க்குக் கொடுக்க முடியும்.

நான் கேட்கிறேன், பிரதமர் அவர்கள் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்ஆயிற்றே. இப்போது 2 ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என்று சொல்ல வைக்கவேண்டியதுதானே. தேர்தல் விதிமுறையாக அது இருந்தாலும் கூட, கருணாநிதிசொல்வதை மன்மோகன் சிங் கேட்பாரா?

மக்கள் இனியும் கருணாநிதியின் பேச்சில் ஏமாறக் கூடாது. இதையெல்லாம் நான்பேசினால் கலைஞருக்குக் கோபம் வருகிறது. அவர் கோபப்படுவதை பார்த்து நான்பயப்படவில்லை. பேரன், மகன் குடும்ப ஆஸ்தியை பெருக்கத்தானா அண்ணாதிமுகவை வளர்த்தார்?

திமுகவை ரத்தம் சிந்தி வளர்த்த தோழர்கள் இருக்கும் இடம் தெரியாமல்இருக்கிறார்கள். மதுரையில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்ற தா.கிருட்டிணன்சிந்திய ரத்தம் கேட்கிறது, திமுகவுக்காக உங்கள் பேரன் என்ன செய்தான் என்று?

திமுகவினர் ரத்தம் சிந்தி தனது கட்சியை வளர்த்தபோது உங்கள் பேரன் திமுக என்றசொல்லையாவது சொல்லியிருப்பானா?

திமுக தோழர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாதுகலைஞர் அவர்களே என்று பேசினார் வைகோ.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+