ஜெ போட்ட கஞ்சா கேஸ்கள்-பாக்யராஜ் தாக்கு
சென்னை:
பொய் சொல்வதிலிருந்து தன்னை இன்னும் ஜெயலலிதா மாற்றிக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று திமுகவில்சேர்ந்துள்ள இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே மைலாப்பூர் தொகுதிதிமுக வேட்பாளர் நெப்போலியனை ஆதரித்து திக தலைவர் கருணாநிதி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடந்தது.அதில் பாக்யராஜ் பேசுகையில், கடந்த 37 வருஷமாக திமுக தொண்டர்கள் எங்கும்திசை மாறிப் போய் விடாமல், கட்டுக் கோப்பாக அவர்களைக் கட்டிக் காத்து நிஜஹீரோவாக விளங்குகிறார் கருணாநிதி. இவர் டூப் போடாத ஹீரோ.
எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அதிமுகவில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூறினேன்.உடனேயே இப்போதெல்லாம் எங்கு பேசினாலும் எம்ஜிஆர் பெயரை உச்சரிக்கஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா.
முதலில் அவர் பெயரைச் சொல்வதையே தவிர்த்தவர் இப்போது தான் ஒருஎம்.ஜி.ஆர். விசுவாசி போல பேச ஆரம்பித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லாமல் தன்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தவேமுயலும் ஜெயலலிதா, உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசியாக இருந்தால்,சென்னையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் பாழ்பட்டுக் கிடக்கிறதே, அதைசீரமைக்காதது ஏன்?
அந்த இல்லத்தை திமுக ஆட்சிதான் சீர்படுத்தப் போகிறது.
நேற்று கூட ஜெயா டிவியில் அவரது பேட்டியைப் பார்த்தேன். எம்.ஜி.ஆரும், நானும்கருணை உள்ளம் படைத்தவர்கள் என்று அவர் பேசினார்.
இவருக்கும், கருணைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? பொய் சொல்வதிலிருந்துஇன்னும் அவர் மாறவில்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் மீதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையைமேற்கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர். வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து,மதுரை செரீனா மீது கஞ்சா கேஸ், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதும் கஞ்சாகேஸ் என, பிடிக்காதவர்கள் மீதெல்லாம் கஞ்சா கேஸ் போட்டு பழிவாங்கி வருபவர்ஜெயலலிதா.
வைகோ கண்ணியமற்ற அரசியல்வாதியாக மாறி விட்டார். மனிதாபிமானம்இல்லாமல் பேசி வருகிறார். டாக்டர் மகன் டாக்டர் ஆவதும், வக்கீல் மகன் வக்கீல்ஆவதும் சாதாரண விஷயம். அதுபோலத்தான் அரசியல்வாதியின் மகனான ஸ்டாலின்அரசியல்வாதியாகி உள்ளார்.
இதை வாரிசு அரசியல் என்று எப்படிக் கூற முடியும்? அவர் ஒன்றும் சும்மாவரவில்லை. கஷ்டப்பட்டுள்ளார், சிறைக்குச் சென்றுள்ளார், போராட்டங்களில்பங்கேற்றுள்ளார்.
மக்கள் ஓட்டுப் போட்டுத் தான் அவர் மேயர் ஆனார், எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.பதவிகளை கருணாநிதி அவருக்கு தூக்கிக் கொடுத்துவிடவில்லை. மக்கள்வாக்களித்து அவரை பதவியில் அமர்த்தினார்கள்.
வரும் தேர்தலில் தமிழன் அரியணை ஏற வேண்டும். அதற்கு கலைஞர் முதல்வராகவேண்டும். எனவே திகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பாக்யராஜ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications