ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வைகோ மீது தயாநிதி மாறன் வழக்கு
சென்னை:
தன்னுடைய பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பேசி வரும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரூ. 1 கோடி இழப்பீடு தர உத்தரவிடக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்குதொடர்ந்துள்ளார்.
சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜ் டிவியின்உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கும், ஜெயா டிவியின் டெலிபோர்ட் உரிமம் கிடைக்கதாமதம் ஏற்பட்டுள்ளதற்கும் தயாநிதி மாறனே காரணம் என்று குற்றம் சாட்டினார்.மேலும் சன் டிவிக்கு ரூ. 10 கோடியளவுக்கு பிஎஸ்என்எல் விளம்பரங்கள்தரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு தயாநதி மாறன் மறுப்பு தெரிவித்து, வைகோ மீது வழக்கு தொடருவேன் என்றுஅறிவித்தார். ஆம்பளையாக இருந்தால் வழக்குப் போடு என்று வைகோவும்,நீயெல்லாம் மீசை வச்ச ஆம்பளையா, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று தயாநிதிமாறனும் கேட்டு சண்டையிலும் ஈடுபட்டு வந்தனர்.
தொலைக்காட்சிகள் தொடர்பான அனுமதியைத் தரும் தகவல் ஒளிபரப்புத்துறை எனது வசமே இல்லை, அதைகவனிப்பது ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி. ஆனால், என் மீது வேண்டும் என்றே தவறான குற்றம் சாட்டி வருகிறார்வைகோ என தயாநிதி விளக்கமளித்திருந்தார்.
இந் நிலையில் வைகோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் வழக்குதொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிவைகோ பேசியுள்ளார். ராஜ் டிவிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது, ஜெயாடிவிக்கான டெலிபோர்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்குவதுஉள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை வைகோ கூறியுள்ளார்.
இவை அனைத்தும் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுக்கள் (தனித்தனியாகஇவற்றுக்கு தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார்).
எனவே எனது பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்துள்ள வைகோ ரூ. 1கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தொடர்ந்து என்னைப் பற்றிஅவதூறாகப் பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
வைகோவின் பேச்சை வெளியிட்ட தினமலர் பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோரும்,ஜெயா டிவியும் தலா ரூ. 1லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார் தயாநிதி மாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications