உங்கள் அன்பு கட்டளைக்காக காத்திருக்கிறேன்-ஜெ

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை:

கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த பொற்கால ஆட்சி அடுத்து ஐந்து ஆண்டுகளும்தொடர, தமிழக வாக்காளர்கள் வாக்குச் சீட்டுக்கள் மூலம் இடப் போகும் அன்புக்கட்டளைக்காக காத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் தீவிரச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெயலலிதாஅஞ்சுகிராமம் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்துசெட்டிக்குளம், கூடங்குளம் வழியாக திசையன்விளை வந்தார். அங்கு பெரும் திரளாககூடியிருந்த மக்களிடையே வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை மீண்டும் அமைத்திட, அந்த பொற்கால ஆட்சிஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர வாக்காளர்களாகிய நீங்கள் வாக்குச் சீட்டுக்கள்மூலம் அளிக்கும் அன்புக் கட்டளைக்காக காத்திருக்கிறேன். இன்னொரு புதியசரித்திரம் படைக்கும் வாக்குறுதிகளை உங்கள் முன்பு அறிவிக்கிறேன்.

தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் அதிக அளவில் தகவல் தொழில்நுட்பநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம்இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

புதிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தப்படும்.பள்ளிகளில் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.அனைத்துப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் பயிற்சிக் கூடம் ஏற்படுத்தப்படும்.

தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்து இயற்றப்பட்டசட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய நகரங்களில்ஐஐடிக்கு இணையாக உலகத் தரத்திலான பொறியியல் கல்லூரிகள் நிறுவப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில்படிப்படியாக புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பாம்புக் கட், தேள் கடி,நாய்க்கடிக்கான மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்.

உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 2,900 கோடி மதிப்பீட்டில் நீர் வள ஆதார தொகுப்புத்திட்டம்-2 செயலாக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்து ஆய்வுநடத்தப்படும்.

நெசவாளர்களின் நலன் பேணும் பொருட்டு தமிழக முதலமைச்சரின் நெசவாளர் நிலன்பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுநடைமுறைப்படுத்தப்படும்.

அனைத்து ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளிலும்படிப்படியாக மாலை நேர அரசு தனிப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். பனைஏறும் தொழிலாளர் பாதுகாப்பிற்காக பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க உள்ளூர் தொழில் வேலை வாய்ப்புகளுக்குஏற்ப தொழில் சார்ந்த பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று பேசினார்ஜெயலலிதா.

ஜெயலலிதா இன்று சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகியதொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்றைய பிரசாரத்தை மதுரை நகரில்முடிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+