நாளை வெளியே வரும் கராத்தே தியாகராஜன்
சென்னை:
தலைமறைவு சென்னை மாநகராட்சி மேயர் கராத்தே தியாகராஜன் நாளை மீண்டும் சென்னைக்குள் காலடி எடுத்துவைக்கவுள்ளார்.
டெல்லியில் இருந்து யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட தியாகராஜன்,நாளை காலை டெல்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு வருகிறேன். பிற்பகலில் நான்அங்கிருப்பேன்.வந்தவுடனே ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக கூட்டணிக்காக பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளேன். என்னைபோலீசால் கைது செய்ய முடியாது.. காரணம், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சென்னை போலீஸார்சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே நான் கைதுசெய்யப்படுவேன் என்று நினைக்கவில்லை. அப்படியே நடந்தாலும் அது குறித்துக்கவலைப்படப் போவதில்லை.
என்னை மீண்டும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷணசாமி அனுமதிதந்துவிட்டார். இதனால் விரைவில் காங்கிரசில் சேருவேன்.
என்னை காங்கிரசில் சேர்க்க திமுக எதிர்க்கவில்லை. இது தொடர்பாக முன்னாள் சென்னை மேயரும் துணைப்பொதுச் செயலாளருமான ஸ்டாலினுடன் பேசிவிட்டேன். அவர் நான் காங்கிரசில் சேருவதை வரவேற்பதாகவும்,அடுத்த கட்சியின் விஷயத்தில் திமுக தலையிடாது என்றும் கூறிவிட்டார்.
மேலும் எனக்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் அமைச்சர் தயாநிதி மாறனும் பேசிவிட்டார்.இதனால் காங்கிரசுக்குத் திரும்ப எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தல் பிரசாரத்திற்குப் பின்னர்காங்கிரஸ் கட்சியில் சேருவேன் என்றார் கராத்தே.
சென்னையில் விளம்பர போர்டுகள் வைப்பதில் போயஸ் கார்டனுடனான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகாரணமாக கராத்தேவைக் கைது செய்ய திட்டமிட்டது ஆளும் தரப்பு.
ஆனால், இதை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட கராத்தே கடந்த அக்டோபர் மாதம்தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப் படைகளை அனுப்பி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
அந்தப் படைகள் டெல்லி, நேபாளம், புனே, மும்பை என ஊர் சுற்றிவிட்டு வெறும் கையோடு திரும்பிவிட்டன.அவ்வப்போது சன் டிவி நிருபரை டெல்லியில் வைத்து சந்தித்து பேட்டி தருவது, அதிமுகவுக்கு டென்சன் தருவதுஎன்று டைம் பாஸ் செய்து வந்த தியாகராஜன் காங்கிரசில் சேர தீவிரமாக முயன்று வந்தார்.
தலைமறைவாக இருந்த நிலையில், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
தியாகராஜனை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மும்பையில் வைத்து பாதுகாத்ததாகக் கூறப்பட்டது. மேலும்மத்திய உளவுப் பிரிவு பாதுகாப்போடு கராத்தே தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.
நேபாளத்தில் இருக்கிறார், மலேசியாவில் இருக்கிறார், சிங்கப்பூரில் இருக்கிறார் என அவ்வப்போது கராத்தேபற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில்,
நாளை மக்கள் முன் தோன்றுகிறார் அந்நியன்... ஸாரி கராத்தே...












Click it and Unblock the Notifications