வன்முறைக்கு ஜெ-போலீஸ் கூட்டு சதி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் தோல்வி உறுதி என்பது தெளிவாகிவிட்டதால் தமிழகத்தில் வன்முறையைஜெயலலிதாவே தூண்டிவிட்டு, திமுக மீது பழி போடவும், அதன் மூலம் ஆதாயம்தேடவும் திட்டமிட்டிருக்கிறார், சதி செய்து வருகிறார் என்ற சந்தேகம் எனக்குஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் நேற்று தனது பிரசாரத்தை ரத்து செய்த கருணாநிதி அதற்குப்பதிலாக நடிகர் நெப்போலியனை ஆதரித்து மைலாப்பூர் தொகுதிக்குட்பட்டஅடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இயக்குனர் பாக்யராஜ், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு,அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

கருணாநிதி பேசுகையில், இது நெப்போலியனை ஆதரித்துப் பேசும் கூட்டம் மட்டும்அல்ல. திமுகவில் சேர்ந்துள்ள இயக்குனர் பாக்யராஜை வரவேற்கும் கூட்டமும்ஆகும்.

இன்று முதல் திமுகவை வளர்க்கும் வகையில் தனது கருத்துக்களைப் பரப்ப வேண்டும்என்று பாக்யராஜை கேட்டுக் கொள்கிறேன்.

வில்லிவாக்கத்தில் சிறப்பாக செயல்பட்டவர் நெப்போலியன். மயிலாப்பூரையும்பரிவோடு கவனிப்பார் என்று உறுதியாக நம்பலாம். அவர் ஒரு நல்ல சரக்கு(நெப்போலியன் பாட்டிலை ஞாபகப்படுத்திக்குங்கோ). நீங்கள் சோடை ஆக்கி விடாதீர்கள்.

அவர் வெற்றி பெற்றால் உங்களுக்கும், உங்களது தொகுதிக்கும் நன்கு பயன்படுவார்.

முதல்வர் ஜெயலலிதா அபாண்டமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். சட்டம்ஒழுங்கை சீர்குலைத்து, வன்முறையைத் தூண்டி விட்டு தேர்தலை நிறுத்த சதிசெய்கிறார்கள் என்று கூறுகிறார். அவரது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அவரே செய்து விட்டு திமுக மீது பழி போட சதி செய்திருக்கிறாரோ என்று நான்சந்தேகப்படுகிறேன்.

திமுகவினருக்கும், கூட்டணியினருக்கும் நான் கோருவது ஒன்றுதான். எது நடந்தாலும்அமைதியாக இருங்கள்.

உங்களை எல்லாம் திசை திருப்ப, தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கபோலீஸ்காரர்களே திருடுவதைப் போல,

போலீஸ்காரர்களை விட்டே கலவரத்தைச் செய்யச் சொல்லி கலவரம் செய்தவன்திமுககாரன், எதிர்க்கட்சிக்காரன் என்றெல்லாம் பழிபோட்டு நாட்டை ரணகளமாக்கிதனது தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்ள ஜெயலலிதா ஒரு வழியைத்தேர்ந்தெடுத்துள்ளார்.

கிலோ அரிசி 2 ரூபாய்க்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். கொடுக்க முடியும்.நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே இந்த்த திட்டத்திற்காகத்தான்.

எனது இரண்டாவது கையெழுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டுறவுக்கடனை முழுமையாக ரத்து செய்வது தொடர்பான கோப்பில்தான்.

3வது கையெழுத்து, 4வது கையெழுத்து எதற்கு என்று கேட்கக் கூடாது. மற்றகையெழுத்துப் போடும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்க தமிழகத்தின்தலையெழுத்து எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது.

கலர் டிவி குறித்து சிலருக்கு ஏகப்பட்ட வருத்தம். எப்படிக் கொடுப்பார்கள் என்றுகோபத்துடன் கேட்கிறார்கள். யார் கொடுத்தாலும் அது தனிப்பட்ட ஒருவர் கொடுப்பதுஅல்ல. அரசு வரிப் பணத்திலிருந்துதான் கொடுக்க முடியும்.

லட்சக்கணக்கிலே டிவி வாங்கினால் விலை குறையும். சீனாவில் 2 ஆயிரத்துக்கு டிவிகிடைக்கிறது. இந்த டிவிக்களை எல்லாம் அப்படி வாங்கினோம், இப்படிக்கொடுத்தோம் என்று இருக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில்,வெளிப்படையாக வாங்கி வழங்குவோம்.

எந்தக் கம்பெனியில் வாங்கலாம் என்பதையெல்லாம் நான் நிர்ணயிக்க மாட்டேன்.சட்டமன்றத்துக்கு வருகிற தலைவர்களையோ அல்லது அக்கட்சிகளின்பிரதிநிதிகளையோ கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டிதான்டெண்டரை கவனிக்கும் என்றார் கருணாநிதி.

மீண்டும் திமுக ஆட்சி:

இதற்கிடையே தான் போட்டியிடும் ஆயிரம் விளக்குத் தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரசாரம்மேற்கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் சென்றார்.

ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி மீண்டும் வரும். அடுத்த ஐந்தாண்டுகள் திமுகவின் பொற்கால ஆட்சியை தமிழக மக்கள் காண்பார்கள். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டு, அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பெண்கள் திருமண உதவித் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

அத்தோடு முன்பு வழங்கப்பட்ட ரூ. 10,000க்குப் பதில் 15,000 ரூபாயாக உதவித் தொகை அதிகரிக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் போல சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் அதிமுகவை அடியோடு வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் ஸ்டாலின்.

நுங்கம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+