பெண்ணாகரம்-முத்துலட்சுமி சுயேச்சையாக போட்டி
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சமி பெண்ணாகரம் தொகுதியில்சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதை அவரே உறுதிப்படுத்தினார்.
பாமக வேட்பாளராக மேட்டூர் அல்லது பெண்ணாகரத்தில் போட்டியிட முயற்சித்துவந்தார் த்துலட்சுமி. ஆனால், மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணிபோட்டியிடுவதால் முத்துலட்சுமிக்கு வாய்ப்பு தரப்படவில்லை.மேலும், பெண்ணாகரம் தொகுதியில் (முன்பு ஜி.கே.மணி ஜெயித்த தொகுதி)இப்போது திமுக போட்டியிடுவதால் அங்கு பாமக சார்பில் போட்டியிடமுத்துலட்சுமிக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
இதுதொடர்பாக ஜி.கே.மணியை நேரிலும் போய் பார்த்தார் முத்துலட்சுமி. ஆனால்அவருக்கு சீட் தர பாமக தரப்பில் பெரும் தயக்கம் காட்டப்பட்டது. சமீபத்தில்செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸும், முத்துலட்சுமிக்கு அரசியல்சரிப்படாது, அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று அறிவுரைகூறிவிட்டுப் போனார்.
இந் நிலையில் பெண்ணாகரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடமுத்துலட்சுமி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சேலம் 1வது தொகுதி தேர்தல்அதிகாரி செல்வத்திடம் (இத்தொகுதியில்தான் முத்துலட்சுமியின் பெயர் வாக்காளர்பட்டியலில் இடம் பெற்றுள்ளது) சான்றிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் நகலைக்கேட்டு முத்துலட்சுமி விண்ணப்பித்துள்ளார்.
இதை அதிகாரி செல்வமும் உறுதி செய்துள்ளார். அதேபோல முத்துலட்சுமியிடம்இதுகுறித்துக் கேட்டபோது, நான் பெண்ணாகரம் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடப் போவது உண்மைதான். அதற்கு முன்பு மக்களிடம் கருத்துக் கேட்கப்போகிறேன். அதன் பின்னர் எனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
என் கணவர் மீது அன்பு வைத்துள்ள ஏராளமான மக்கள் என்னைப் போட்டியிடுமாறுதொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். அந்த அன்பை என்னால் தட்ட முடியவில்லை.
நான் திமுகவுக்கோ அல்லது பாமகவுக்கோ எதிரி இல்லை. என் மீது அன்புகாட்டுபவர்களின் வலியுறுத்தலால்தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்முத்துலட்சுமி.
ஆனால் முத்துலட்சுமி விவகாரத்தில் பாமக தரப்பில் சில மறைமக வேலைகள்நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளில் பாமகவுக்கு எதிராக திமுகவினர்போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், அங்கு பாமக வெற்றி பெறுவது பெரும்திண்டாட்டமாக இருக்கும் என பாமகவினர் கருதுகிறார்கள்.
எனவே மடிந்த அளவுக்கு திமுகவுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் இறங்கஅவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அந்த அடிப்படையில்தான் பாமக பலம் மிக்க பெண்ணாகரம் தொகுதியில்முத்துலட்சுமிக்கு மறைமுக ஆதரவு கொடுப்பதாக அவரிடம் பாமக தரப்புஉறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்தே அங்கு போட்டியிட முத்துலட்சுமி முடிவு செய்துள்ளார் என்றும் பேச்சுகிளம்பியுள்ளது. அவரைத் தடுக்கும் வேலையில் இப்போது அப் பகுதி திமுகவின்தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications