வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்: திருமா
உளுந்தூர்ப்பேட்டை:
வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,தமிழகத்தில் இப்போது வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதை ஆரம்பித்துவைத்தது திமுகதான்.திமுகவைப் பாருங்கள், அப்பா கருணாநிதி, மகன் ஸ்டாலின், பேரன் தயாநிதி மாறன்.காங்கிரஸைப் பாருங்கள், தந்தை கிருஷ்ணசாமி கட்சித் தலைவர், மகன் விஷ்ணுபிரசாத் இளைஞர் காங்கிரஸ் தலைவர். இன்னொரு பக்கம் தந்தை ப.சிதம்பரம் மத்தியஅமைச்சர், மகன் கார்த்தி சிதம்பரம் பதவிக்காக காத்திருப்பவர்.
பாமக குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. இப்படி திமுக கூட்டணி வாரிசுஅரசியலில் மூழ்கித் திளைத்துள்ள கட்சிகளைக் கொண்டுள்ளது.
மறுபுறம் அதிமுக கூடடணியைப் பாருங்கள். ஜெயலலிதாவுக்கு தமிழகம்தான் வீடு,தமிழக மக்கள்தான் குடும்பம். அவருக்கென்று எந்தத் தனிப்பட்ட குடும்பம்கிடையாது. தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்ஜெயலலிதா.
(அப்ப, ஊரை அடிச்சு உலையில் போடும் மன்னார்குடி மாபியாவின்கொள்ளைகள்..??)
வைகோவைப் பாருங்கள். அவரது மகனோ, மகளோ யாருமே அரசியலுக்குவந்ததில்லை. அவரது குடும்பத்தினரின் முகத்தை யாராவது பார்த்திருப்பீர்களா?அவர்கள் வெளிச்சத்துக்கு வந்ததே இல்லை. வைகோ அதை விரும்பவும் மாட்டார்.தன்னிகரற்ற தலைவர் அவர்.
திருமாவளவன் பற்றி உங்களுக்கேத் தெரியும். நீங்கள்தான் எனது குடும்பம். அய்யோபாவம் திருமாவளவன்!
தமிழர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம். ஆனால் தமிழகத்தை ஒரேகுடும்பம் ஆளலாமா என்பதுதான் இப்போது மக்கள் முன்பு உள்ள ஒரே கேள்வி.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி அரசு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது, கட்டவிழ்த்து விட்டது போல ஆகி விடும்.எனவே வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பித்துஅவர்களை மீண்டும் எழ விடாமல் செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications