அதிமுகவில் சேருவார் சரத்குமார்: வைகோ
திருவாரூர்:
திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் விரைவில் அதிமுகவில் சேர்ந்தார்என்ற தகவல் வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்த வைகோதனது பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில்,திரை உலகில் சுப்ரீம் ஸ்டாராக விளங்கி வரும் சரத்குமார், திமுகவிலிருந்துவிலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் அதிமுகவில் சேர்ந்தார்என்ற தகவலும் வரும்.
தினம் ஒரு நல்ல தகவல் உங்களுக்கு கிடைக்கும்.
கொத்தடிமைகளுக்குத்தான் திமுகவில் இடம். அதை சரியாக சொல்லியுள்ளார்சரத்குமார், சரியான சமயத்தில் வெளியேறியுள்ளார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கலைஞரின் அறிவிப்புகளை கேட்டமாத்திரத்தில்இது பொய், பொய் சொல்கிறார் கலைஞர் என்கிறார்கள்.
2 ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி, இலவச எரிவாயு அடுப்பு, இவற்றை எல்லாம் நம்பமக்கள் முட்டாள்கள் அல்ல. 2 ரூபாய்க்கு அரிசி கொடுக்க முடியும் என்றால் அதைஏன் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் கொடுக்க வண்டும், இப்போதே உங்களதுசெல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசிடமிருந்து மானியத் தொகையைப் பெற்றுமாநில அரசுக்கு கொடுத்து அரிசி விலையைக் குறைக்க உதவலாமே?
அப்போ, மக்கள் நலன் உங்களுக்குமுக்கியமல்ல, ஆட்சிக்கு வருவதுதான்முக்கியமாகப் போய் விட்டது அப்படித்தானே?
இப்படிக் கூறினால் ஏதோ சில தொகுதிகளிலாவது வெற்றி பெறலாமேஎன்பதற்காகத்தான் இப்படிக் கூறுகிறார் கலைஞர்.
கலர் டிவி கொடுக்கிறீர்களே, கேபிள் இணைப்பும் தருவீர்களா என்று கேட்டால்,தேவைப்பட்டால் அதையும் கொடுப்போம் என்கிறார் கலைஞர். அதாவது கேபிள்இணைப்பையும் கொடுத்து கூடுதலாக 500 கோடி ரூபாயை சுருட்டலாமே!
நான் கேட்கிறேன், கேபிள் இணைப்பை 10 ரூபாய்க்கு கொடுக்கத் தயாரா? என்றார்வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications