விஜய்காந்துக்கு எதிராக சிம்ரன் இன்று பிரசாரம்
விருத்தாச்சலம்:
விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் நடிகை சிம்ரன் இன்றுஅதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இத்தொகுதியில்அதிமுக, பாமகவும் போட்டியிடுகின்றன.அதிமுகவில் புதிதாக சேர்ந்துள்ள நடிகை சிம்ரன், விருத்தாச்சலம் தொகுதியில் இன்றுபிரசாரம் செய்து பேசுகிறார்.
அதிமுக வேட்பாளர் காசிநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சிம்ரன் காலை 10மணிக்கு வேன் மூலம் பிரசாரம் செய்து பேசுகிறார்.
பசு மாடு தருவோம்: விஜய்காந்த்
இதற்கிடையே மயிலாடுதுறையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜய்காந்த், நாங்கள்ஆட்சிக்கு வந்தால் 15 கிலோ அரிசி ரேசன் கடைகளில் வழங்குவோம் என்றுசொன்னால் சிரிக்கிறார்கள்.
கேரளாவுக்கு அரிசி கடத்தி பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள்?.சிரிக்கத்தான் செய்வார்கள். ரூ. 1,000 கோடி கமிஷன் கிடைத்தால் எந்தத்திட்டத்துக்கும் சரி என்பார்கள். நாங்கள் அரிசி, ரூ. 500 பணம் மட்டுமல்லஏழைகளுக்கு வீட்டுக்கு ஒரு பசுமாடும் தருவோம்.
எல்லா கிராமத்திலும் மக்களுக்கு பாத்ரூம், டாய்லெட் கட்டித் தருவோம்.
நான் கை காசைப் போட்டு கட்சி நடத்துகிறேன். நானும் கூட கோடி கோடியாய் காசைவாங்கிக் கொண்டு 20 சீட்டையும் வாங்கிக் கொண்டு கூட்டணியில் சேர்ந்திருக்கலாம்.
ஆனால் அதைச் செய்யவில்லை. எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார்விஜய்காந்த்.
வேட்பாளர்கள் மதுரையில் சங்கமம்:
இதற்கிடையே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 234 வேட்பாளர்களும் இன்றுமதுரையில் கூடுகின்றனர்.
அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறார் கட்சித் தலைவர்விஜயகாந்த். தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியிலும் இலலாத வகையில்,விஜயகாந்த் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அக்கட்சிக்கு ஒரே சின்னம் கிடைக்காது என்பதால் 234 தொகுதிகளிலும் ஒவ்வொருசின்னத்தில் போட்டியிடப் போகிறது தே.மு.தி.க.
இந் நிலையில் கட்சியின் அத்தனை வேட்பாளர்களையும் மதுரைக்கு வரவழைத்துமக்களிடம் அறிமுப்படுத்தும் கூட்டத்திற்கு விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் திருச்சி, திண்டுக்கல்லில் பிரசாரம் செய்கிறார் விஜயகாந்த்.இதைத் தொடசர்ந்து 16ம் தேதி மதுரை முழுவதும் சுற்றி வந்து பிரசாரம்செய்யவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications