ஜெ. பச்சை குத்துடன் இந்திரகுமாரி பட்டபாடு!
சென்னை:
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய வந்த முன்னாள் அமைச்சர்இந்திரகுமாரியின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவம்சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இலவசசெருப்பு, வேட்டி, சேலை வழங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இந்திரகுமாரி மீதுகடந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிறைவாசம்அனுபவித்து வெளியே வந்தார் இந்திரகுமாரி.இந் நிலையில் தனது ஆதரவாளர்களோடு இந்திரகுமாரி நேற்று திமுகவில்இணைந்தார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்த இந்திரகுமாரி, அதன் வளாகத்தில்உள்ள கலைஞர் அரங்கத்தின் வாசலில் நின்று கொண்டு உடன் வந்த அனைத்துப்பெண்களையும் அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வலது கையைப் பார்த்த பலரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டனர். காரணம் பளிச்சென தெரிந்த ஜெயலலிதாவின் பச்சை குத்தப்பட்ட படம்.
இதை சிலர் இந்திரகுமாரியிடம் எடுத்துக் கூறவே, அவரும் பதறிப் போய் கையைமறைத்துக் கொண்டார். பின்னர் ஒருவர் பிளாஸ்டர் வாங்கிக் கொண்டு வந்தார்.
அதை ஜெயலலிதாவின் படத்தின் மீது ஒட்டிய இந்திரகுமாரி, நிகழ்ச்சி முடிந்துவெளியேறும் வரை கையை புடவையால் மறைக்க பெரும்பாடு பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications