பிரசாரத்தை தொடங்கினார் முத்துலட்சுமி
பெண்ணாகரம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பெண்ணாகரம் தொகுதியில்தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பாமக சார்பில் போட்டியிட சீட் கேட்டு வந்த முத்துலட்சுமிக்கு அக்கட்சி கதவை மூடிவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த முத்துலட்சுமி பெண்ணாகரத்தில்சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.பழங்குடி மக்கள் நல இயக்கம் சார்பில் (இந்த இயக்கத்தை முத்துலட்சுமிதான்ஆரம்பித்துள்ளார்) சார்பில் அவர் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதி பாமகவுக்குகிடைக்காததால் அதிருப்தியில் உள்ள பாமகவினர் முத்துலட்சுமிக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்.
பாமகவின் இந்த உள்ளடி வேலைகளால் திமுக எரிச்சலடைந்துள்ளது.
இந் நிலையில் பெண்ணாகரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை மத்துலட்சுமிதொடங்கி விட்டார். பெண்ணாகரம் பஞ்சாயத்துத் தலைவர் மது தலைமையில் நடந்தகூட்டத்தின்போது முத்துலட்சுமி அறிமுகப்படுத்தப்பட்டார்.
கூட்டத்தில் த்துலட்சுமி பேசுகையில், வீரப்பன் பல குற்றங்களை செய்திருந்தாலும்கூட பழங்குடியினரின் நலனுக்காக அவர் பாடுபட்டு வந்தார். இதை பழங்குடியினமக்கள் மறக்க மாட்டார்கள். தமிழர்களின் நலனிலும் வீரப்பன் அக்கறை செலுத்திவந்தார்.
தனது கடைசி மூச்சு வரை தமிழ் இனத்தின் நலனுக்காகவே அவர் பாடுபட்டு வந்தார்.அப்பாவிப் பழங்குடியின மக்கள் வீரப்பன் வேட்டை என்ற பெயரில்சித்திரவதைக்குள்ளானார்கள். எந்தக் காரணமும் இன்றி அதிரடிப்படையினரிடம் சிக்கிசின்னாபின்னமானார்கள்.
அவர்களின் நலனுக்காகவே நான் பழங்குடி மக்கள் நல இயக்கத்தைஆரம்பித்துள்ளேன்.
எனக்கு சட்டசபைக்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், பழங்குடியின மக்களின்நலனுக்காக குரல் கொடுப்பேன். பெண்ணாகரம் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார் முத்துலட்சுமி.
பின்னர் தனது தேர்தல் அறிக்கையையும் (அட..) முத்துலட்சுமி வெளியிட்டார்.
அதில்,
- ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட பாடுபடுவேன்.
- அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு முழுமையானநிவாரண உதவிகளைப் பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்துவேன்
-சின்னாறு, பங்கப்பள்ளி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பேன் என்பதுஉள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளையும் அறிவித்துள்ளார்.
முத்துலட்சமி அறிமுகக் கூட்டத்தில பாமகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் அப் பகுதி திமுகவினர் நறநறக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications